Fu Yang நகரில், Nan Nan போன்ற, அனாதைக்குழந்தைகள் அதிகம் உள்ளனர். நிலம் தரிசாக இருப்பதால், சில விவசாயிகளின் வாழ்க்கை மிகவும் இன்னல் மிக்கது. அவர்கள் ரத்தம் விற்க வேண்டியிருந்தது. இதனால் லாபம் பெற்ற, சில சட்டவிரோத ரத்தம் சேகரிப்பு நிலையங்கள், ரத்தம் எடுக்கும் சாதனங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தின. இதனால், சில விவசாயிகளுக்கு எய்ட்ஸ் கிருமி தொற்றியது. கடந்த சில ஆண்டுகளில், இத்தகைய செயல்களை அரசு கடுமையாக ஒடுக்கி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பெரும் உதவி அளித்துள்ளது. இருந்த போதிலும், Nan Nan போன்ற அனாதைக்குழந்தைகள் இன்னும் அதிகம் இருக்கின்றனர். 2003ஆம் ஆண்டின் இறுதியில், மற்றவர்களின் கருத்தைப் பொருட்படுத்தாமல், லட்சக்கணக்கான யுவான் வருமானம் தரும் வியாபாரத்தை Zhang Ying கைவிட்டு, எய்ட்ஸ் கிருமி தொற்றிய ஏழைக் குழந்தைகளுக்கு உதவி அளிப்பதற்கான ஓர் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு நிறுவப்பட்ட துவக்கத்தில், பெற்றோரை இழந்து துன்பப்பட்ட அக்கா Huang Jin Hong மற்றும் தம்பி Huang Jin Leiக்கு உதவி அளிக்கப்பட்டது. அவர்களின் துன்பங்களைக் கேட்டறிந்த Zhang Ying 5 முறை அவர்களின் வீட்டுக்குச் சென்று பார்த்தார். ஒவ்வொரு முறையும் அவர்களுக்கு பல பொருட்களை வழங்கினார்.
இதற்கிடையில், மற்ற அனாதைக்குழந்தைகளுக்கும் அவர் உதவி அளித்தார். இந்த அனாதைக்குழந்தைகளுடன் தொடர்பு கொண்ட போது, வாழ்க்கையில் அவர்களுக்கு உதவி அளிப்பது மட்டும் போதுமானதாக இல்லை. இந்த குழந்தைகளில், பெரும்பாலோர் கொஞ்சம் பேசுகின்றனர். அவர்களின் கல்வியறிவு நன்றாக இல்லை. குழந்தைகளின் மனதில் சுமை அதிகம் என்றும், உண்மையில் அவர்களுக்கு உதவி அளிக்க வேண்டுமானால், அவர்களின் தனிமை மனத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் Zhang Ying கருதினார். 2004ஆம் ஆண்டின் கோடைகாலத்தில், Zhang Yingயின் ஏற்பாட்டில், 30க்கு அதிகமான அனாதைக்குழந்தைகள் வெளியே பயணம் மேற்கொண்டனர். இந்த நடவடிக்கை மூலம் ஒதுங்கியே வாழ்ந்த குழந்தைகள் படிப்படியாக கவலையற்ற குழந்தைகளாக மாறினர். "இந்த பயணம் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. அம்மா (Zhang Ying) வின் கவனிப்பு பெற்றேன். பேசவும், மற்றவர்களுடன் விளையாடவும் விரும்பும் குழந்தையாக நான் மாறினேன்." என்று Huang Jin Lei கூறினார். இது வரை, மொத்தம் 300 குழந்தைகளுக்கு Zhang Ying உதவி வழங்கியுள்ளார். அவர்களைப் பராமரிப்பதால், குழந்தைகள் Zhang Ying மீது ஆழ்ந்த அன்பு கொண்டனர். Zhang Ying அவர்களால் அம்மா என அழைக்கப்படுகின்றார். அவர்கள் பல்வகை பொருட்களை தயாரித்து, அன்பளிப்பாக அம்மாவுக்கு வழங்கினர். இந்த அனாதைக்குழந்தைகளின் மனதில் Zhang Ying அம்மாவாக மாறியுள்ளார். தவிர, அவர்களின் முன்மாதிரியாக திகழ்கின்றார்.
|