• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-24 22:38:10    
கால்பந்து உலகக் கோப்பை சிறப்பு பரிசுகள்

cri

கிரிக்கெட் விளையாட்டு ஒரு சில நாடுகளில் மட்டுமே புகழ்பெற்றுள்ளது, ஒரு சில நாடுகளில் மட்டுமே மக்களுக்கு பிடித்த விளையாட்டாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிவோம். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் ஆர்வம் என்பதை விட கிரிக்கெட் வெறி கொண்ட ரசிகர்கள் அதிகம் என்பதும் இந்நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் நடசத்திர அந்தஸ்து, நல்ல வருமானம் என்று வளமான வாழ்க்கையை கிரிக்கெட் விளையாட்டு ஏற்படுத்தித் தந்துள்ளது என்பது நம்மில் பலருக்கு பழைய செய்தியே. ஆனால் சீனாவில் கிரிக்கெட் என்றால் நமக்குள் ஒரு புது ஆர்வம் புகுந்து, சீனாவில் கிரிக்கெட்டா என்ற ஆச்சரியமான கேள்வியும் எழக்கூடும். கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் கிரிக்கெட் விளையாடப்பட்டது என்று சொன்னால் நம்புவது கடினமான ஒன்று. ஆனால் அது உண்மை. பதிவுகளின்படி 1858ம் ஆண்டில் ஷான்காயில் கிரிக்கெட் விளையாடப்பட்டதாக அறீயப்படுகிறது. கிட்டத்தட்ட 96 வருடங்கள் கழித்து 2004ம் ஆண்டில் சீனாவில் சீன கிரிக்கெட் சங்கம் அமைக்கப்பட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்பே ஊன்றப்பட்ட விதை இப்போது கீழே வேர் பிடித்து மேற்பரப்பில் துளிர்விடத்தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டில் கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோரை உருவாக்கும் பணியில் சீன கிரிக்கெட் சங்கம் ஏடுபட்டது. சீன கிரிக்கெட் சங்கத்தின் திட்டங்களும், நடவடிக்கைகளும் சீரான வேகத்தில் சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டு சீனாவில் கொஞ்சம் கொஞ்சமாக பரவத்தொடங்கி, சில தசாப்த காலத்தில் பிரசித்தி பெற்ற விளையாட்டாக மாறும் நிலை உள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் கூடுதல் ஆர்வமும், திறமையாளர்களும் கொண்ட ஆஸ்திரேலியாவின் உதவியும் ஆதரவும் தற்போது சீனாவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

கால்பந்து உலகக் கோப்பை சிறப்பு பரிசுகள்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்து முடிந்து, தற்போது ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க கண்டங்களின் தனியார் கால்பந்தாட்ட குழுக்களில் வீரர்கள் மாற்றம் மற்றும் பயிற்சியாளர்கள் மாற்றம் என்று கால்பந்தாட்ட ரசிகர்களின் கவனம் வழமைக்கு திரும்பியுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் மற்றும் அணிகள், சிறப்பு பரிசு பெற்றவர்கள் பற்ரிய தகவல்கள் உங்களுக்காக.

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் நேர்மையாக அல்லது நெறியோடு ஆடிய அணி என்ற விருது பிரேசில் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு கிடைத்துள்ளது. உலகக்கோப்பையை கைப்பற்றும் கனவுகள் மெய்ப்படாமல் போனாலும், சர்வதேச அரங்கில் கால்பந்தாட்டத்தின் நெறிமுறைகளை ஒழுக்கத்தை சீராக கடைபிடித்தவர்கள் என்ற மதிப்பை பிரேசிலும், ஸ்பெயினும் பெற்றுள்ளமை தனிச்சிறப்பானது என்பது குறிப்பிட தக்கது.

தங்க காலணி:

சிறப்பாக விளையாடும் கால்பந்தாட்ட வீரர், அதிக கோல்களை குவித்து வெற்றி வாய்ப்பை தனது அணீக்கு உர்வாக்கி தருபவர் என்ற ரீதியில் தங்க காலணி வழங்கப்படுவது உலகக்கோபை போடியின் வழமையாகும். இவ்வாண்டு இந்த தங்க காலணியை பெற்றவர் ஜெர்மனியைச் சேர்ந்த மிரோஸ்லோவ் க்ளோஸ். கடந்த 44 ஆண்டுகால வரலாற்றில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக மொத்தம் 5 கோல்களை போட்ட நிலையில் இந்த சிற்ப்பு பரிசை பெற்றுள்ளார் மிரோஸ்லோவ் க்ளோஸ். இந்த உலகக்கோப்பையை பொருத்தவரை அவர்தான் அதிக கோல்களை அடித்தவர்.

தங்க கால்பந்து:

உலகக்கோப்பையின் இறுதியாட்டத்தில் எதிரணியான இத்தாலியின் வீரர் ஒருவர் மீதான கோபத்தில் அவரை மார்பில் முட்டித் தள்ளியமைக்காக சிவப்பு அட்டை காட்டப்பட்டு ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையிலும், சிறந்த வீரர் என்று ஊடகத்துறையினரும், கால்பந்தாட்ட வல்லுநர்களும் மதிப்பதை அடையாளப்படுத்தும் தங்க கால்பந்து பரிசு பிரான்ஸ் அணியின் தலைவர் சினதேன் சிதானுக்கு வழங்கப்பட்டது. திறமைசாலி கால்பந்தாட்ட உலகில் குறிப்ப்ட்டுச் சொல்லதக்க ஒரு வீரர், சினதே சிதான்.