• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-25 15:14:59    
ஒரே பேச்சு

cri
இந்தியாவில் விடுமுறையைக் கழித்து விட்டு சீனா திரும்பியதும், அன்றிரவே அலுவலகத்திற்குப் போனேன். பணியில் இருந்து உருது மொழி நிபுணர் நவீத் செளஹான் என்னைக் கண்டதும் "ராஜா சாப், ஆ கயா?" என்று கூறியபடியே என்னைக் கட்டித்தழுவி வரவேற்றார். நண்பர்களையும், உறவினர்களையும் கட்டித்தழுவி வரவேற்பது இஸ்லாமியக் கலாச்சார மரபு. வட இந்தியாவில் மற்ற சமூகத்தினரிடையேயும் இது பரவலாகக் காணப்படுகிறது. இப்படி ஒருவரை ஒருவர் கட்டித் தழுவும் போது முழுமனதான அன்பு வெளிப்படுகிறது. இரண்டு உடல்கள் இணையும் போது உள்ளங்களும் இணைகின்றன. இந்த நெருக்கத்தில் கசப்புகள் கரைந்து விடுகின்றன. இவ்வாறு முழுமையான அன்பை வெளிப்படுத்துவதை சீனர்கள் யி ச்சின் யி யி என்கிறார்கள். அதாவது, ஓர் இதயம் ஒரு மனது. ஒரு இதயத்திற்கு ஒரு மனது தானே இருக்க முடியும் என்கிறீர்களா? சிலருக்கு மூன்று இதயங்களும் இரண்டு மனதும். இருக்கும் என்கிறார்கள் சீனர்கள். சான் ச்சின் அர் யி என்னும் இந்த நிலையில், அரை மனதுடன் தான் அன்பு வெளிப்படும் என்கிறார்கள்.

அண்மையில் தமிழ் நாட்டில் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். அதிலும் "சொல்வதைச் செய்வோம். செய்வதையே சொல்வோம்" என்ற சொல் அலங்காரங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு கவர்ச்சியைத் தந்தன. இராமாயண காவியத்தில் கூட இராமபிரானின் உயர் பண்புகளாக ஒரு சொல், ஒரு வில் என்று சொல்லப்படுகிறது. வாக்குறுதிகளை அள்ளி வீசுவோர் சொன்ன சொல் தவறாமல் இருப்பார்களா? அல்லது சொன்னது நீதானா? என்று கேட்க வைத்து விடுவார்களா என்பதைக் கணிப்பதற்கு யி யன் யி ச்சிங்-அதாவது ஒரு சொல் ஒரு செயல் என்கிறார்கள் சீன மொழியில்.

சிலர் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்கள். சொன்ன சொல்லை மறக்காமல் செயல்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவர்களை சீனர்கள் ஷு வோ யி பு அர் என்கிறார்கள். அதாவது இவர்கள் ஒன்றே சொல்வார்களாம்; இரண்டு அல்ல. இன்னும் சிலர் இருக்கிறார்கள்-ஒவ்வொரு நாளும் ஒரு வாக்குறுதி தருவார்கள். இப்படிப்பட்டவர்கள் சான் தியன் லியாங் தோ-அதாவது மூன்று நாட்களில் இரண்டு முடிவுகள் என்று கூறுகிறார்கள் சீன மக்கள். காலையில் சொன்னதை மாலையில் மறந்து விடும் ஆட்களை யி கன் அர் ஜிங் என்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நம்ப முடியாது. ஏனென்றால் இவர்கள் பு சான் பு ஸி-அதாவது இவர்கள் மூன்றல்ல, நான்கும் அல்ல. இந்த மனிதர்கள் மற்ற விஷயங்களிலும் கேவலமாக நடந்து கொள்வார்கள் என்பதால், இவர்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக-யி தாவ் ஸியாங் துவான்-வெட்டி விட வேண்டும். அருகே நெருங்க விடா தீர்கள். ஆரத்தழுவி வரவேற்காதீர்கள்.