• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-25 18:59:37    
புளிப்பு கேலிபுஃராவா வறுவல்

cri

கலை.......முதலில் காலிபுஃளவரை நன்றாக சுத்தம் செய்து பேரீச்சம் பழம் அளவுக்கு துண்டு துண்டாக நறுக்க வேண்டும். வாணலியில் கொஞ்சம் உப்பு நீர் விட்டு 15 நிமிடம் ஊறவிட வேண்டும்.

ராஜா.....இற்கிடையில் இரண்டு முறை காலிபுஃளவர்ை கிளற வேண்டும்.

கலை......ஆமாம். இப்படி செய்தால் உப்பு கலந்த நீரில் காலிபுஃளவர் நன்றாக ஊறிவிடும்.

ராஜா.....இதற்கிடையில் பூண்டின் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.

கலை......இப்போது அடுப்பில் உணவு எண்ணெய் சூடான வாணலியில் காலிபுஃளவர்களை போடுங்கள். பின் லேசாக வதக்க வேண்டும். சுமார் 30 வினாடி வதக்கிய பின் வெளியே எடுத்து தட்டின் மேல் போடுங்கள்.

ராஜா...... காலிபுஃளவரை நன்றாக வேகும்படி வதக்க கூடாது. அப்படிதானே.

கலை......ஆமாம். அரை வேக்காடாக இருக்கட்டும். இல்லாவிட்டால் காலிபுஃளவரின் சுவை இழந்து விடும்.

ராஜா......அப்புறம் என்ன செய்ய வேண்டும்?

கலை...... உணவு எண்ணெயை கொஞ்சம் எடுத்துவிட்டு வாணலியில் எஞ்சிய எண்ணெயில் மிளகாய் வற்றல், மிளகு ஆகியவற்றை போட்டு பொறிக்க வேண்டும். நல்ல வாசனை வந்ததும் அவற்றை வெளியே எடுக்க வேண்டும்.

ராஜா......சுவையான எண்ணெயில் என்ன போட வேண்டும்?

கலை......இப்போது பூண்டு, சர்க்கரை, புளிப்பு சாறு ஆகியவற்றை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டும். தீயை பெரிதாக்கி புளிப்பு சாறு கொதித்த பின் உருளைக் கிழங்கு மாவை தூவுங்கள். சாறு கட்டியான பின் வதக்கிய காலிபுஃளவரை வாணலியில் போடுங்கள்.

ராஜா.....இப்போது புளிப்பு காரம் கொண்ட காலிபுஃளவர் கறி தயாரா?

கலை.....கடைசி வேலை செய்ய வேண்டும். அதாவது கெட்டியான சாறு நிறைந்த காலிபுஃளவரை தட்டில் போட்ட பின் நல்லெண்ணெயை துளித்துளியாக தெளியுங்கள்.

ராஜா......இந்த காலிபுஃளவர் பார்த்தால் கொஞ்சம் தெரியும். சுவைத்தால் புளிப்பும் காரமும் கவர்த்து ருசியாக இருக்கும்.

கலை.....ஆமாம். கடைசியில் தெளிக்கப்பட்ட நல்லெண்ணெய் நல்ல வாசனை வீசுகின்றது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுகின்றது.

ராஜா.....சரி. நண்பர்களே இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியை கேட்ட பின் புளிப்பு காரம் கொண்ட கேலிபுஃராவா காய்கறியை சமையுங்கள்.