• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-25 19:06:36    
குழந்தகளின் அறிவுத் திறன்

cri

ராஜா.....கலை நீங்கள் இப்போது சொன்னதற்கு ஏதாவது அடிப்படைக் காரணம் வேண்டுமே.

கலை.....காரணம் இருக்கிறதா?

ராஜா......ஆமாம். கலை நீங்கள் பாருங்கள். 2004ம் ஆண்டில் டியென்சிங் மருத்துவ பல்கலைக்கழகத்தின் உள் நோய் துறை ஆய்வகம் மக்களின் வாழ்க்கையில் உணவு உப்பில் அயோடின் சத்தை அதிகரிக்கும் திட்டப் பணி நடைமுறைபடுத்தப்பட்ட பின் குழந்தைகளின் அறிவுத் திறனையும் செயல்துடிப்பு மேம்பாட்டையும் மதிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கலை......அந்த ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா?அயோடின் பற்றாக்குறைப் பகுதிகளில் உணவு உப்பில் அயோடின் சத்தைக் கலந்த பின் அதை உண்ட பள்ளி மாணவர்களின் அறிவுத் திறன் பொதுவாக 12 விழுக்காடு உயர்ந்துள்ளது. கருவுற்ற பெண்கள் அயோடின் கலந்த உணவு உப்பை அல்லது அயோடின் உருண்டைகளை உட்கொண்ட பின் பெற்றெடுத்த குழந்தகளின் அறிவுத் திறன் இயல்பான நிலையை அடைந்துள்ளது. அறிவுத் திறன் பற்றாக்குறை உள்ள சிசுக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ராஜா......கலை நீங்கள் சொன்ன தகவல் மகிழ்ச்ச்சி தருகின்றது. இந்த அயோடின் பற்றாக்குறைக்கு என்ன காரணம் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். அல்லவா?

கலை......ஆமாம். நீங்கள் எழுப்பிய கேள்வி நியாயமானது. மண்ணில் அயோடின் சத்து பொதுவாக குறைவாக இருப்பதால் மக்களின் உடம்பில் அயோடின் பற்றாக்குறை உண்டாகிறது. மக்கள் உட்கொள்ளும் காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றில் அயோடின் சத்து குறைவாக உள்ளது. மக்களுக்கு கவலை தரும் இந்த ஆபத்தை நீக்குவதற்கு மிக எளிதான வழிமுறை என்ன என்றால் உணவு உப்பில் அயோடின் சத்தைக் கலப்பதாகும்.

ராஜா.......புரிந்து கொண்டேன். மண்ணில் அயோடின் பற்றாக்குறை சத்து உடம்பில் சேர வேண்டுமானால் குறிப்பிட்ட அளவுக்கு அயோடின் கலக்கப்பட்ட உணவு உப்பை உட்கொள்ள வேண்டும்.

கலை......இது பற்றி சீன சுகாதார அமைச்சகத்தின் அயோடின் நோய் கட்டுப்பாடு மையத்தின் பேராசிரியர் ச்சுன் சிங் ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜா......அயோடின் சத்தை உடம்பில் சேர்ப்பதில் தேர்வு செய்தது மிகவும் விவேகமான முயற்சியாகும். உப்பு பாதுகாப்பானது. மலிவானது. மேலும் கூடுதலான காரணம் ஒன்று உண்டு. அதாவது அது மனித உடம்பில் நாள்தோறும் நிரப்பப்பட வேண்டிய சத்தாகும் என்று பேராசிரியர் ச்சுன் கூறினார்.

கலை.....அன்றாட வாழ்க்கையில் அயோடின் கலந்த உணவு உப்பை உட்கொள்வது பற்றி பிரச்சாரம் செய்வது தவிர, கருவுற்ற பெண்கள் 2வது அல்லது 3வது மாதத்திலிருந்து குழந்தை பிறந்த பிறகு 2 ஆண்டு வரையிலும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் மிக முக்கிய காலகட்டமாகும். இந்த காலம் வாழ்க்கை முழுவதற்கும் தேவைப்படும் அயோடின் சத்தை போதிய அளவில் சத்து நிரப்பபடும் காலமாகும். பிறந்த குழந்தைக்கு தேவைபடும் அயோடின் முக்கியமாக தாயிடம் இருந்து தான் கிடைக்கிறது. ஆகவே கருவுற்ற பெண்ணுக்கு சாதாரண மக்களுக்கு தேவைபடும் அளவை விட ஒரு மடங்கு அதிகமாக அயோடின் சத்து தேவைப்படுகின்றது.

ராஜா.....இந்த தத்துவத்தின் படி கருவுற்ற பெண்ணுக்கு அயோடின் பற்றாக்குறை இருந்தால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படலாம். பிறந்த குழந்தை முக்கியமாக தாயிடமிருந்து பால் குடிக்கின்றது. ஆகவே பால் கொடுக்கும் தாய்க்கு அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.

கலை.....ராஜா நீங்கள் பாருங்கள். பேராசிரியர் ச்சுங் எடுத்து காட்டிய உதாரணங்களுக்கு நமது வாழ்க்கையுடன் எப்போதும் தொடர்பு உண்டு.

ராஜா......ஆகவே. வளர்ந்தவர்கள் அயோடின் கலந்த உணவு உப்பை உட்கொள் வேண்டும். கருவுற்ற பெண்கள் தாங்கள் பெற்றெடுக்கும் குழந்தைக்காக அயோடின் கலந்த உணவு உப்பை மட்டுமல்ல அயோடின் கலந்த உணவு பொருட்களையும் நாள்தோறும் உட்கொள்ள வேண்டும்.

கலை...... அயோடின் கலந்த உணவு பொருட்கள் எவை. நீங்கள் சொல்லுங்கள்.

ராஜா......அயோடின் சத்து கலந்த உணவு பொருட்கள் எவை என்று சொன்னால் மீன் போன்ற கடல் உணவு பொருட்களில் அயோடின் சத்து மிக அதிகமாக உள்ளது. முட்டை பால் ஆகியவற்றிலும் அயோடின் அளவு அதிகம்.

கலை......காய்கறிகளில் அயோடின் சத்து கொஞ்சம் குறைவு. ஆகவே நாம் உட்கொள்ளும் உணவில் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும். முட்டையும் பாலும் அன்றாட உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும்.

ராஜா..... அயோடின் கலந்த உணவு உப்பை உட்கொள்வதற்கு அறிவியல் ஆதாரம் எதுவும் உண்டா?

கலை......கண்டிப்பாக உண்டு. அயோடின் என்பது ஒரு விறுவிறுப்பான ரசாயனப் பொருளாகும். உணவு உப்பில் உள்ள அயோடின் உயர் வெப்பத்தில் ஆவியாகிப் போகும். ஆகவே காய்கறிகளை சமைத்து தட்டில் போடும் போது மட்டுமே அயோடின் கலந்த உப்பை போட வேண்டும். சமைக்கும் போது போடக் கூடாது.

ராஜா......இது மட்டுமல்ல சூடான எண்ணெயில் ஐயோதின் உப்பைப் போட்டு காய்கறிகளை வதக்குவது கெட்ட வழக்கமாகும். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.