• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-27 17:26:37    
பெய்ச்சிங்கிலுள்ள அரச குடும்பப் பூங்காக்கள்

cri

பெய்ச்சிங் தலைநகராகத் திகழும் வரலாறு 800 ஆண்டுகளைத் தாண்டியுள்ளது. விட்டுச்செல்லப்பட்ட அரச குடும்பப் பூங்காக்களின் எண்ணிக்கை பத்துக்கு மேலாகும்.

இந்த எழில் மிக்க பூங்காக்களில் பெய்ஹைய் பூங்கா, உலகில் நீண்ட வரலாறுடைய அரச குடும்பப் பூங்காவாகும். 13வது நூற்றாண்டில் யுவான் வம்சத்தை நிறுவிய பேரரசர் ஹுபிலியெ இவ்விடத்தைத் தேர்ந்தெடுத்து யுவான் வம்சத் தலைநகரைக் கட்டியமைக்கக் கட்டளையிட்டார் என்று பெய்ஹைய்பூங்காப் பண்பாட்டு ஆய்வு அலுவலகத்தின் வரலாற்றுவியல் நிபுணர் பெய்சென்சென் அம்மையார் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, யுவான் வம்சம் முதல் மிங் மற்றும் சிங் வம்சங்கள் வரை, இவ்விடம் பேரரசர்களின் அரண்மனையாகவும் அரச குடும்பப் பூங்காவாகவும் இருந்துவந்தது.

தலைநகரை நிறுவுவது பற்றிய உலக வரலாற்றைப் பொறுத்தவரை, பூங்காவினால், ஒரு தலைநகரை நிர்ணயிப்பது என்பது உலகில் காண்பது அரிது என்றார். தற்போதைய பெய்ஹைய் பூங்காவின் பரப்பளவு சுமார் 70 ஹெக்டராகும்.

இதில் நீர் பரப்பளவு 50 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. பொன்னிற மண்டபம், தொன்மை வாய்ந்த அமைதியான புத்த மதக் கோயில் ஆகியவை உரிய முறையில் பூங்காவில் அமைந்துள்ளன.

பெய்ஹைய் பூங்கா நீர் பரப்பின் நடுப்பகுதியில் சியுங்ஹுவா என்னும் சிறிய தீவு உள்ளது. தீவில் திபெத் பாணியில் கட்டப்பட்ட பெய்தா எனும் வெண்ணிறக் கோபுரம், திபெத் புத்த மத நம்பிக்கையுடைய சிங் வம்சப் பேரரசரின் கட்டளைக்கிணங்கக் கட்டப்பட்டது.

பயணிகள், இந்த வெண்ணிறக் கோபுரத்தில் ஏறித் தெற்கை நோக்கிப் பார்க்கும் போது, தாம் நிற்கும் இடத்தின் கீழுள்ள சியுங்ஹுவா தீவைச் சேர்த்து மொத்தம் 3 பெரிய சிறிய தீவுகள் ஒரே கோட்டில் இணைந்திருந்து, நீரில் தென்படுவதைக் காணலாம். மூடுபனியால் மூடப்படும் நாட்களில் தீவுகளில் கட்டப்பட்ட கூடார மண்டபங்கள் அவ்வப்போது தென்படுவதால் தேவலோகத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

நீர்ப்பரப்பில் அமைந்துள்ள 3 தீவுகளும் தொழில் நிபுணர்களால், சீனாவின் அரச குடும்பப் பூங்கா பாணியில் கட்டப்பட்டன. இவை ஒரு குளமும் மூன்று மலைக்குன்றுகளும் என்று அழைக்கப்படுகின்றன.

அதாவது, குளத்தில் மூன்று தீவுகளை செயற்கை முறையில் உண்டாக்குவதாகும். கடலில் தெய்வம் வசிக்கும் 3 மலைகள் உள்ளன என்றும் இம்மலைகளில் நீண்ட காலம் வாழ்வதற்கான மருந்துகள் உள்ளன என்றும் சீனாவின் பண்டைக்காலப் புனைக்கதை ஒன்று கூறியிருந்தது.

இதனால், நீண்ட ஆயுளுக்காகச் சீனாவின் பேரரசர்கள் இந்தப் பூங்காவில் ஒரு குளம் மற்றும் மூன்று மலைக்குன்றுகளைக் கட்டியமைக்கக் கட்டளைப் பிறப்பித்தார்.

இத்தகைய கட்டடத் தனிச்சிறப்பு, சீன அரச குடும்பப் பூங்காவுக்கு மட்டும் உண்டு என்று பெய்ச்சிங் வரலாற்றை ஆராயும் நிபுணர் லீ சியெபின் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது, ஒரு குளமும் 3 மலைக்குன்றுகளும் என்ற முறைமை, அரச குடும்பப் பூங்காவுக்குரிய தனிச்சிறப்பு முறைமை. வேறு எவரும் இவ்வாறு செய்ய அனுமதிக்கப்படவில்லை.

சீனாவின் நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தில் யார் விதியை மீறினாலும், கொலை செய்யப்படுவார். ஆகவே, ஒரு குளமும் 3 மலைக்குன்றுகளும் பெய்ஹைய் பூங்காவின் மிக முக்கியமானதொரு தனிச்சிறப்பாகும்.

பெய்ஹைய் பூங்காவுக்கு வருகை தருவோர் இதைப் பார்க்காமல் இருந்தால், அரச குடும்பப் பூங்காவின் ஆத்மாவைக் கண்டுபிடிக்கவில்லை என்று கூறலாம் என்றார்.

அடுத்து, பெய்ச்சிங் புறநகரின் மேற்கு பகுதியிலுள்ள கோடை கால மாளிகை பற்றி கூறுகின்றோம். அது, 1750ஆம் ஆண்டில் கட்டப்படத் துவங்கியது.

உலகப் பண்பாட்டு மரபுச் செல்வங்களில் ஒன்றாகத் திகழும் கோடை கால மாளிகை, சீனப் பூங்காக்களின் உருவரைவில் சிறப்பு என்று பாராட்டப்படுவதாகக் கோடை கால மாளிகையின் துணைத் தலைவர் காவ் தாவெய் கூறினார்.

அவர் மேலும் கூறுகிறார், கோடை கால மாளிகை, பெய்ச்சிங் அரச குடும்பப் பூங்காவைப் பிரதிபலித்துள்ளது. இது பெய்ச்சிங் அரச குடும்பப் பூங்காக்களில் மிகவும் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ள பூங்காவும் ஆகும் என்றார்.

சுமார் 300 ஹெக்டர் பரப்பளவுடைய கோடை கால மாளிகையில் அரண்மனைகள், கூடார மண்டபங்கள் ஆகியவற்றைத் தவிர, அழகான கோயில்களும் சீனாவின் வயல் காட்சியும் காணப்படலாம். சீன அரச குடும்பப் பூங்காவுக்குரிய மற்றொரு தனிச்சிறப்பை இது பிரதிபலித்துள்ளது.