• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-17 16:23:22    
பெய்ச்சிங்கிலுள்ள பிரபல பூங்காக்கள்

cri

சுமார் 300 ஹெக்டர் பரப்பளவுடைய கோடை கால மாளிகையில் அரண்மனைகள், கூடார மண்டபங்கள் ஆகியவற்றைத் தவிர, அழகான கோயில்களும் சீனாவின் வயல் காட்சியும் காணப்படலாம்.

சீன அரச குடும்பப் பூங்காவுக்குரிய மற்றொரு தனிச்சிறப்பை இது பிரதிபலித்துள்ளது. அதாவது, உலகிலுள்ள அனைத்து இடங்களும் பேரரசருக்குரியவை என்ற கருத்துக்கேற்ப, அனைத்து இயற்கை காட்சிகளையும் இந்தப் பூங்காவுக்குள் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்யப்பட்டுள்ளது.

வென்சுசென் மலையும் குன்மிங் ஏரியும் முக்கிய காட்சித் தலங்களாகும். சுமார் 50 மீட்டர் உயரமுடைய வென்சுசென் மலையின் வடிவம், வவ்வால் போன்றது.

குன்மிங் ஏரியின் தோற்றத்தைப் பார்க்கும், ஒரு பீச் போன்றது. சீனாவின் பாரம்பரிய கருத்தில், வவ்வால், இன்பத்தைக் குறிக்கின்றது.

பீச், நீண்ட ஆயுளின் சின்னமாகும். சிங் வம்சப் பேரரசர் சியென்லுங், அவருடைய தாயாருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்கென இப்பூங்கா கட்டப்பட்டது.

இதனால், சீனாவின் இன்பம் மற்றும் நீண்ட ஆயுள் பண்பாட்டின் தனிச்சிறப்பு மிகவும் முழுமையாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

கோடை கால மாளிகையில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, நீள நடைக்கூடத்தைப் பார்வையிட வேண்டும். 728 மீட்டர் நீளமுடைய இந்த நடைக்கூடம் உலகில் மிகவும் நீளமான நடைக்கூடமாகும். கின்னஸ் உலகப் பதிவில் இது சேர்க்கப்பட்டுள்ளது.

நீள நடைக்கூடத்தில் தீட்டப்பட்ட வண்ண ஓவியங்களில் சீனாவின் பண்டை காலக் கதைகளும் கட்டுக் கதைகளும் இடம்பெற்றுள்ளன.

வளைந்து செல்லும் இந்த நடைக்கூடம், இப்பூங்காவிலுள்ள காட்சித்தலங்களை ஒரு கோட்டில் இணைத்திருப்பதால, கோடைக் கால மாளிகையின் சத்தம் இல்லாத வழிகாட்டி என்று போற்றப்பட்டுள்ளது.

தேஹொயுவான் என்னும் பெரிய நாடக அரங்கம், நடைக்கூடம் போல புகழ்பெற்றது. சீனாவில் இதுவரை பாதுகாக்கப்பட்டுள்ள தொன்மை வாய்ந்த அளவில் மிகப் பெரிய நாடக அரங்கம் இது.

3 மாடிகளைக் கொண்ட இந்த அரங்கத்தின் உயரம் 21 மீட்டர். பிரிட்டிஷ் பயணி மாஸ்கெல் அம்மையார் கூறியதாவது, இங்கு வந்து நாடகத்தைக் கண்டுகளிப்பது மிகவும் ஆர்வமூட்டுவது.

இங்கு நுழைந்ததும் கவர்ச்சிகரமான விடயங்கள் பல உள்ளன என்பதை உணர்ந்துள்ளோம். இது எங்கள் மனதில் ஆழப்பதிந்துள்ளது என்றார்.

கோடைக் கால மாளிகையை விட்டு கிழக்கை நோக்கிச் சற்று தூரம் சென்ற பின்னர் யுவான்மிங்யுவான் என்னும் பூங்காவை அடையலாம். சிங் வம்ச பேரரசர் தற்காலிகமாக வசிக்க விரும்பும் இல்லங்களில் ஒன்றாக இது திகழ்ந்தது.

ஆனால், 1860ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு கூட்டுப் படையினால் கொள்ளையடித்துத் தீக்கிரையாக்கப்பட்டுப் பாழாகி, ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்ட கட்டடத்தின் சிதிலங்கள் மட்டும் விட்டுச்செல்லப்பட்டன என்பது வருந்தத் தக்கது.

ஆனால், தரமாகச் செதுக்கப்பட்ட கற்களைக் கையால் தொடும் போது அக்காலத்தின் கம்பீரத்தைக் கற்பனை செய்யலாம். வரலாற்றை உணர இங்கு வரும் பெய்ச்சிங் நங்கை ஹென்நின் கூறியதாவது,

கோடைக் கால மாளிகையை விட இவ்விடத்தைப் பார்வையிட விரும்புகின்றேன். அது பாழாகிவிட்ட போதிலும், அக்காலத்திலான அதன் கம்பீரத்தைக் கற்பனை செய்யலாம். அதன் கம்பீரம், சிறப்பு ஆகியவற்றினால் வருகை தரும் அனைத்து பயணிகளும் வியப்படைகின்றனர்.

ஏனெனில் அது சீர்குலைக்கப்பட்ட போதிலும் அழகாகக் காணப்படுகின்றது என்றார். இனி, சுற்றுலா பற்றிய தகவல் வழங்குகின்றோம்.

ஒரு நாளில் இந்த 3 பூங்காக்களைப் பார்வையிட வல்ல வசதியான சுற்றுலா நெறியைப் பரிந்துரை செய்கின்றோம். காலையில் சுரங்க ரயிலில் ஏறி, சிங்ஸ்புவகுவான் என்னும் நிலையத்தில் இறங்கி, அதன் வடக்கில் அமைந்துள்ள யூயுதான் பாயிஹு துறைமுகத்தில் இருக்கும் கப்பலில் ஏறி, கோடைக் கால மாளிகை சென்றடையலாம்.

அங்கு 3 மணி நேரம் சுற்றுலா செய்த பிறகு, துங்மன் என்னும் கோடை கால மாளிகையின் கிழக்கு வாசலிலிருந்து பேருந்து மூலம் யுவான்மிங்யுவான் என்னும் பூங்கா சென்றடையலாம்.

2 மணி நேரம் பார்வையிட்ட பின்னர் பேருந்தில் ஏறி பெய்ஹைய் பூங்கா சென்றடையலாம். போக்குவரத்து மற்றும் பூங்காவுக்கான நுழைவுச் சீட்டுக்களின் மொத்தத் தொகை ஒருவருக்குச் சுமார் 100 ரன்மின்பி யுவான். பெய்ச்சிங் வாருங்கள், வரவேற்கிறோம்.