• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-26 09:21:41    
கருத்துக்களும் முன்மொழிவுகளும்

cri

க்ளீட்டஸ்: இலங்கை காத்தான்குடி நேயர். மு.மு.மபாஸ் எழுதிய ஏப்ரல் 10 நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் பற்றிய கடிதம். ஏப்ரல் 10ம் நாள் செய்தித் தொகுப்பில் சீனப்பெருஞ்சுவர் பராமரிப்பு திட்டப்பணி பற்றியும், ஆறு தரப்பு பேச்சுவார்த்தை வடகிழக்காஅசிய ஒத்துழைப்பு மன்றம் செலுத்தும் கவனம் பற்றியும் கேட்டேன். பல சுவையான, பயனுள்ள தகவல்களை அறிந்துகொண்டேன். மக்கள் சீனம் நிகழ்ச்சியில் சீனாவில் கிராம நிதிச் சூழல் பற்றி அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து பெரம்பலூர், உத்திரக்குடி நேயர் கலைவாணன் ராதிகா எழுதிய கடிதம். ஏப்ரல் 20ம் நாள் நிகழ்ச்சியில் சேந்தமங்கலம் எஸ். எம். ரவிச்சந்திரன் அவர்களின் முதல் வெளிநாட்டுப்பயணம், முதல் விமானப்பயணம் உள்ளிட்ட விபரங்களை அறிந்து மகிழ்ச்சியடைந்தோம். அவரது கருத்துக்களின் மூலம் வந்தவரை வாழ வைக்கும் தமிழ்நாடு என்பது போல், வந்தவரை உணவு உண்ணவைக்கும் சீனா என்பதை அறிந்து, அவரையும் சீனாவையும் போற்றி பாராட்டுகிறோம் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து ஆரணி ஜெ.மஞ்சுளா எழுதிய மே 15ம் நாள் இடம்பெற்ற சீன மகளிர் நிகழ்ச்சி பற்றிய கடிதம். நிகழ்ச்சியில் சீனாவின் வறட்சியான பத்து மாநிலங்களில் தூய நீர் கேகரிப்புத் தொட்டிகள் அமைத்தவிதம் பற்றியும் நிலத்தடி நீர் சேகரிப்பு முறைபற்றியும் அறிந்தேன். குடிநீருக்காகவும், குளிப்பதற்காகவும் மக்களுக்கு தூயநீர் சேகரிப்பு முறையை அறிமுகப்படுத்தி செயல்படுத்துவது பாராட்டுதலுக்குரியது என்று எழுதியுள்ளார்.

வாணி: மே 23ம் நாள் இடம்பெற்ற தமிழ் மூலம் சீன நிகழ்ச்சியை கேட்டபின் திருச்சி மணக்கால் நேயர் இரா. அன்பழகன் எழுதிய கடிதத்தில், தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் மூலம் பல கருத்துக்களையும், விடயங்களையும் தெளிவான முறையில் கற்றுக்கொண்டோம், மொழிப்பாடத்தை சிற்ப்பாக நடத்தி, எங்களுக்கு விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தினீர்கள். இந்நிகழ்ச்சியின் மூலம் கல்விக்கடல் பரந்து விரிந்தது. இதில் கரை கண்டவர் எவரும் இலர் என்பதை புரிந்துகொண்டோம் என்று எழுதியுள்ளார்.