• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-27 20:29:17    
நினைவு செல்கள்

cri
நினைவு செல்கள்

மாற்று உடல் உறுப்புகள் இன்னொருவரின் உடலில் பொருத்தும் போது, அவருடைய குணத்தையும் அவற்றுடன் இணைந்து சேர்க்கப்பட முடியும். அமெரிக்காவின் யாரிசான்நா அர்க்கான்ஸா, மாநில பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற உளவியல் பேராசிரியர், 20 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் இந்த வியத்தகு முடிவைக் கண்டுள்ளார். குறிப்பிட்ட ஒரு உறுப்பு இன்னொருவரின் உடலில் மாற்றி பொருத்தப்படும் போது, அதில் சேமித்துவைக்கப்பட்ட தகவல்களும் ஆற்றலும் அதனுடன் சேர்ந்து இணைக்கப்படும் என்றும் அவர் விளக்கிக்கூறினார்.

நுண் மின்சார நிலையம்

பிரித்தானிய சிலிஸ் மின்னாற்றல் நிறுவனம், ஒரு கிலோவாட் செயல் திறனுடைய எரி மின் கலன்களை வெற்றிக்கரமாக ஆராய்ந்த வடிவமைத்துள்ளது. இதை வீட்டுப்பயன்பாட்டுக்கான மின்சார நிலையமாக பயன்படுத்தலாம். அது, சாதாரண குடும்பங்களுக்கு மின்னாற்றலையும் சுடு நீரையும் வழங்க முடியும். இந்த புதிய ரக எரி ஆற்றல் மின் கலன் கையடக்கமானது. இயற்கை வாயுவைப் பயன்படுத்துவதன் மூலம் மின் சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

வலது காது

வலது காது மூலம் கேட்பது, இடது காது மூலம் கேட்பதை விட மனதில் நன்கு பதியும் என்று அமெரிக்க ஹவாய் பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளார்கள். மனிதரின் கேட்கும் திறன் நரம்புக்கும் மூளைக்குமிடையிலான தொடர்பு இவ்வாறு கொள்ளப்பட்டிருக்கின்றது. அதாவது, இடது காது மூலம் கேட்கும் தகவல் மூளையின் வலப்பகுதிக்கும், வலது காது மூலம் கேட்கும் தகவல், மூளையின் இடப்பகுதிக்கும் அனுப்படுகின்றன. வயது ஆக ஆக, மூளையின் இடப்பகுதியின் நினையாற்றல், வலப்பகுதியை விட மேம்பாட்டைக் காட்டுகிறது. ஆகையால் வலது காது மூலம் கேட்டதை மனதில் நன்கு பதிய வைக்கலாம் என்று அறிவியலாளர்கள் விளக்கிக்கூறியுள்ளனர்.