
ஜப்பானிய பொம்மைகளுக்கு எப்போதும் மவுசு உண்டு. அந்நாட்டு பொம்மைகளில் கலை நயம் அதிகம். நவீன கால குழந்தைகளுக்கு ஏற்றதாகவும் அமைந்திருக்கும். அண்மையில் அறிமுகமாகியிருக்கும் டோராமோன் என்னும் பொம்மைக்கு இப்போது கடும் கிராக்கி. காரணம் இது ஒரு கேலிச் சித்திர உருவத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
ரேடியோ கட்டுப்பாட்டு முறையில் இயங்கும் இந்த டோராமோன் ஹெலிகாப்டரைப் போல் சுழன்று கொண்டேயிருக்கும். கடந்த வாரம் டோக்கியோ நகரில் இந்த பொமாமை விற்பனைக்காக அறிமுகம் செய்யப்பட்டது. பார்த்தமாத்திரத்திலேயே பொம்மைகள் வேண்டுமென்று குழந்தைகள் பெற்றோரிடம் அடம்பிடிக்க விற்பனைக்கு வந்த சிறிது நேரத்திலேயே அவ்வளவு பொம்மைகளும் விற்றுத் தீர்ந்து விட்டன.

போப் ஆண்டவர் பொம்மை
போப் ஆண்டவர் பதினாறும் பெனிடிக்டை கவுரவிக்கும் வகையில் ஒரு பொம்மை ஜெர்மனியில் விற்பனைக்கு வந்துள்ளது.
பதினாறு அங்குலம் உள்ள இந்தப் பொம்மையின் விலை ஆறாயிரம் ரூபாய். அதன் கைகளும், கால்களும் அசையக்குடிவை. 999 பொம்மைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. அவைமட்டுமே விற்பனைக்கு வந்து உள்ளன.
தினமும் பத்து மைல் ஓடும் இளவரசர் ஹாரி
இங்கிலாந்து இளவரசர் ஹாரி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். அவர் இருபத்தைந்து கிலோ எடை உள்ள உடைமைகளை முதுகிலும், துப்பாக்கிகளை தோளிலும் சுமந்தபடி தினமும் பத்து மைல்தூரம் ஓடுகிறார்.
நல்ல வெயிலில் உடல் முழுவதும் வியர்த்து விறுவிறுக்க சகபயிற்சியாளர்களுடன் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றார். தினமும் அவர் எட்டு மணி நேரம் ஓடுகிறார்.
நடிகர் துப்பாக்கியால் சுட்டதால் நாடக ரசிகர்கள் ஓட்டம்
ரஷியாவில் பொரோநேஸ் நகரில் உள்ள ஒரு அரங்கத்தில் ஒரு நாடகம் நடந்தது.

ஒரு நடிகர் துப்பாக்கியால் சுட்டார். இதைப் பார்த்த ரசிகர்கள் பீதியில் அரங்கை விட்டு ஓட்டம் பிடித்தனர்.
ஈராயிரத்து இரண்டாம் ஆண்டு அக்டோபர் மாதம் மாஸ்கோ நகரில் நடந்த நடன நிகழ்ச்சியின் போது செசன்யா தீவிரவாதிகள் தாக்கியதில் நூற்று இருபத்தொன்று பேர் பலியானார்கள். அது போல இப்போதும் தாக்குதல் ஏதும் நடத்தப்படுகின்றதோ என்ற பீதியில் தான் அவர்கள் ஓட்டம்பிடித்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் நாடக அரங்குக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தான் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்ட்ட நாயை மையமாக வைத்து நடக்கும் கதை என்பதால் நடிகர் போசி துப்பாக்கியால் சுட்டார் என்பது தெரிய வந்தது.
அதன்பிறகு போலீசார் ரசிகர்களை சமாதானப்புட்தித உட்கார வைத்தனர்.
|