சீன வானொலி நிலையம், வணக்கம் நேயர்களே, இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில் யூவானான் மாநிலத்தின் நாட்டுப்புறப்பாடல் பாடகி வான் ஹோ என்பது பற்றி கூறுகிறோம், அறிவிப்பாளர் விஜயலட்சுமி
யூன்னான், சீனாவின் தெற்மேற்கு பகுதியில் உள்ள மாநிலம். அங்கே பல நாட்டுப்புறப்பாடல்கள் பரவி இருக்கின்றன. இப்போது நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது, சீனாவில் புகழ்பெற்ற பாடகி ஹாவான் ஹோ பாடிய யூவானான் நாட்டுப்புறபாடல், சிறிய ஆற்றில் பாய்ந்து செல்லும் ஓடும் நீர் என்னும் இப்பாடலாகும். மிகவும் புகழ்பெற்றது.
நிலா ஒளி வீசும்
ஆழந்த மலையில் அண்ணன் இருக்கிறான்.
நிலா போல அண்ணன் விண்வெளியில் நடக்கிறார்.
மலையின் கீழ் சிறிய ஆற்றில் நீர் மெல்லமெல்ல ஓடுகிறது
என்று இப்பாடல் கூறுகிறது. 50 ஆண்டுகளுக்கு முன், இந்த பாடலால் ஹாவான் ஹோ. புகழ்பெற்றார். இனிமையான குரலுடனும், உண்மையான உணர்வுடனும் அவர் இப்பாடலை பாடியதை, ரசிகர்கள் நன்றாக ரசித்தனர்.
வான் ஹோ, சீனாவின் மூத்த பாடகிகளில் ஒருவர். 1928ம் ஆண்டு, யூவானான் மாநிலத்தின் குவான்மின் நகரில் பிறந்த அவர் குழந்தை காலத்திலே, உள்ளூர் நாடகர்களை அவர் பார்க்கவும், நாட்டுப்புறப்பாடல்களை கேட்கவும் விரும்பினார். இடை நிலை பள்ளியில், குவான்மின் நகரில் நடைபெற்ற மாணவர் இசை போட்டியில் அவர் முதலாவது பரிசு பெற்றார். 1949ம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், யூன்னான் மாநிலத்தின் ஆடல் பாடல் குழுவில் சேர்ந்து ஒரு தனியார் பாடகியாக மாறினார்.
நீண்டகாலமாக ஊரில் வாழ்கின்ற அவர். நாட்டுப்புறப்பாடல்களை இடைவிடாமல் கற்றுக் கொண்டதால் தமது பாடும் திறனை வெகுவிரைவில் உயர்த்தினார். 1953ம் ஆண்டில், சீன பண்பாட்டு அமைச்சகம் நடத்திய முதலாவது சீன நாட்டுப்புறபாடல் மற்றும் அங்கேற்ற ஆடல் நிகழ்ச்சியில், வான் ஹோ, இனிமையான குரலுடனும், கிராமப்புற பாணியுடனும் அக்கா சி, குதிரை ஓட்டுவது சிறிய ஆற்றில் பாய்ந்து செல்லும் நீர் முதலிய யூனான் நாட்டுப்புற பாடல்களை பாடி. ரசிகள்களால் மிக பிடிக்கும். இப்போது, அக்கா சி என்னும் பாடல் நீங்கள் கொஞ்சம் கேட்கலாம். இந்த பாடலில் தேயிலை பறிக்கும் பெண்மணிகள் உழைக்கின்ற காட்சி வர்ணிக்கப்படுகின்றது.
|