• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-28 20:24:38    
விளையாட்டுச் செய்திகள்

cri

ஒரே வாரத்தில் இரண்டு ஒலிம்பிக் நட்சத்திரங்களின் பதக்கங்கள் திருட்டப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போல் வால்ட் எனும் கழிதாண்டும் போட்டியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற டாட்டியானா கிரிகோரியேவாவின் பதக்கம் திருடப்பட்ட நிலையில் கடந்த செவ்வாயன்று ஹாக்கி விளையாட்டில் இருமுறை ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற கேட்ரினா பாவல்லின் பதக்கங்கள் திருடப்பட்டுள்ளன. 34 வயதாகும் காட்ரினா பாவல் 1996 மற்றும் 2000த்தில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற மங்கை ஆவார். இந்த இரு பதக்கங்கள் தவிர காமன்வெல்த் போட்டிகளில் வென்ற ஒரு தங்கம் மற்றும் வெண்கலம், இரு உலகக் கோப்பை தங்கம் என அவரது வெற்றிப் பதக்கங்கள் எல்லாம் திருடப்பட்டுள்ளன.

கடந்த 2003ம் ஆண்டு டிசம்பரில் சிட்னி ஒலிம்பிக்கில் டேக்வான்டோ போட்டியில் தங்கம் வென்ற லாரன் பர்ன்ஸ் என்பவரது தங்கம் பதக்கம் திருடப்பட்டது ஆனால் மர்மமான முறையில் அவருக்கு திரும்ப அனுப்பபட்டது. அதன்பிறகு கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனை மிச்சேல் ப்ரோகன் என்பவரது பதக்கங்களும் திருடப்பட்டன.

49வது உலக துப்பாக்கி சுடும் போட்டிகள்

க்ரோவேஷியாவின் சாக்ரேப் நகரில் கடந்த 22ம் நாளன்று சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் 49வது உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் துவங்கின. 107 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2000த்துக்கும் அதிகமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் 15 விதமான விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு வகை போட்டிகள் கொண்ட இந்த 49வது உலக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். 16 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்களில் 54 பேர் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.

இப்போட்டிகளில் பங்கேற்க சீனா 72 பேர் போட்டியாளர்கள் அடங்கிய குழுவை அனுப்பியுள்ளது. இதில் 10மீட்டர் ஏர் பிஸ்டல் கைத்துப்பாக்கி பிரிவில் 20 வயது பாங் வெய் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். சர்வதேச அளவில் முதன்முறை போட்டியில் கலந்துகொண்ட பாங் வெய் பலரையும் ஆச்சரியமூட்டும் வகையில் தங்கம் வென்றுள்ளார். மற்றுமொரு பிரிவில் இந்தியாவின் மாணவ்ஜித் சிங் சந்து தங்கம் வென்றார். 29 வயதான மாணவ்ஜித் சிங் சந்து 6வது இடத்திலிருந்து முன்னேறி தங்கம் வென்று உலக அளவில் ஆறு முறை கலந்துகொண்ட நிலையில் முதன்முறையாக பதக்கப்பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.