• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-31 08:11:14    
பெய்சிங் ஒலிம்பிக்

cri

பெய்சிங் சமூக அறிவியல் கழகம் அன்மையில் நடத்திய ஒரு ஆய்வின் படி பெய்சிங் மாநகரவாசிகளில் பலர் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை தொலைக்காட்சியில் கண்டுகளிக்கப்பதையே விரும்புவதாக கூறியுள்ளனர். இந்த ஆய்வின்படி 52 விழுக்காட்டினர் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளை நேரில் சென்று விளையாட்டு அரங்களில் கண்டுகளிப்பதற்கு நுழவுச் சீட்டு விலை ஒரு தடையாக இருப்பதாக கூறியுள்ளனர் அதேவேளை 43 விழுக்காட்டினர் அவர்களுடைய பணி நேரம், பணிச்சுமை ஆகியவை காரணம் நேரில் சென்று விளையாட்டுகளை கண்டுகளிக்க முடியாது என்றுள்ளனர். பொதுவில் 85 விழுக்காட்டினர் தொலைக்காட்சியின் மூலம் இவ்விளையாட்டுப் போட்டிகளை பற்றி அறிந்துகொள்வதை விரும்புகின்றனர், 42 விழுக்காட்டினர் செய்தி ஏடுகளையும், 35 விழுக்காட்டினர் வானொலியையும், 18 விழுக்காட்டினர் இணையதளமூடாகவும் தகவல் அறிந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 24 விழுக்காட்டினர் நிச்சயம் இந்த போட்டிகளை நேரில் அரங்குகளுக்கு சென்று கண்டுகளிப்பதையே தங்கள் விருப்பமாக கூறியுள்ளனர்.

விருப்பமான விளையாட்டு என்று பார்த்தால் மொத்தத்தில் 54 விழுக்காட்டினருக்கு கூடைப்பந்து, 53 விழுக்காட்டினருக்கு மேசைப்பந்து, 49 விழுக்காட்டினருக்கு கால்பந்து, 46 விழுக்காட்டினருக்கு கைபந்து (வாலிபால்). தடகள விளையாட்டுகளில் போட்டியாளர்களுக்கிடையிலான திறமை வெளிப்பாட்டை, போட்டியாற்றலை பார்க்க 49 விழுக்காட்டினர் விருப்பம் கூறியுள்ளனர் 45 விழுக்காட்டினருக்கு போட்டியாளர்கள் எப்படி சிறப்புற தங்களை அரங்கேற்றுகின்றனர் என்பதில் அக்கறை செலுத்துகின்றனர்.

டேபிள் டென்னிஸ்

சீனாவின் வடமேற்கு சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் 10வது உலக பெண்கள் டேபிள் டென்னிஸ் போட்டியை நடத்தவுள்ளது. சின்சியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் உருமுச்சியில் வரும் செப்டம்பர் 29ம் நாள் முதல் அக்டோபர் முதல் நாள் வரை உலக மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெறும். டேபிள் டென்னிஸ் போட்டிகளில் மிகப் பிரசித்தி பெற்ற பெண்கள் உலகக் கோப்பை, பல்வேறு கண்டங்களில் நடைபெறும் போட்டிகளின் வெற்றியாளர்களும், உலக தரவரிசையில் முதல் 16 இடங்களில் உள்ள வீராங்கனைகளும் கலந்துகொள்ளும் மாபெரும் போட்டியாகும். சினாவின் உலக மற்றும் ஒலிம்பிக் போட்டிகலீன் வெற்றியாளர்களான வாங் நின்னும், சாங் யினிங்கும் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள் எனப்படுகிறது. 1996ல் முதன் முதலாக சீனாவின் ஹாங்காங்கில் தொடங்கப்பட்ட பெண்கள் டேபிள் டென்னிஸ் உலக கோப்பையை இதுவரை 7 முறை சீனா வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகள்

2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பெய்சிங்கில் நடைபெறவுள்ளது நாம் அறிவோம். 2012ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் லண்டன் மாநகரில் நடைபெறவுள்ளன. அதற்கு அடுத்து 2016ம் ஆண்டில் எந்த இடத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. அதெற்கென பல்வெறு நாடுகள் போட்டியிடவும், போட்டியிடும் நகரங்களை தெரிவு செய்வதிலும் செயல்பட்டுவருகின்றன. அமெரிக்காவும் 2016ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஆவலாக உள்ளது. தற்போதைக்கு அமெரிக்காவின் சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்கள் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டியின் பட்டியலில் உள்ளன. இவற்றில் ஒரு நகரத்தை கமிட்டி தெரிவு செய்து போட்டியாளர் நகரமாக சர்வதேச ஒலிம்பிக் குழுமத்திடம் முன்வைக்கும். முன்னதாக ஹூஸ்டன், ஃபிலடெல்ஃபியா நாகிய நகரங்களும் இந்த போட்டியில் நின்றன ஆனால் அமெரிக்க ஒலிம்பிக் கமிட்டி ஆய்வு மற்றும் தெரிவில் இந்நகரங்களை விலக்கியுள்ளது. ஏற்கனவே அமெரிக்கா 3 முறை ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியுள்ளது. அமெரிக்காவில் 1932, 1984 ஆகிய ஆண்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும், 1996ம் ஆண்டு அட்லான்டா நகரமும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தின.