• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-31 08:11:14    
ஹுவா சி கிராமம்

cri

சியாங் சூ மாநிலத்தின் சூ செள தொழில் மண்டலம், சீனா மற்றும் சிங்கப்பூர் அரசு நடத்தும் சர்வதேச ஒத்துழைப்பு திட்டப்பணியாகும். இங்கு மின்னணு தகவல், மருந்து உற்பத்தி, புதிய மூலப்பொருட்கள் முதலிய முக்கிய தொழில்கள் நடைபெறுகின்றன. இம்மண்டலத்தின் நிர்வாக அலுவலகத்தின் துணை இயக்குநர் யோ வேன் லை அம்மையார் பேசுகையில், இம்மண்டலத்தைக் கட்டிய போது, சுற்று வட்டாரங்களில் தொழில் கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கு வழிகாட்டியாக, கிராமங்களில் நவீன சிறிய நகர்களை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார். அவர் கூறியதாவது:

தற்போது, 90 விழுக்காட்டு விவசாயிகள் நவீன குடியிருப்புகளில், வாழ்கின்றனர். அவர்களில் முதியோர்களுக்கு, அரசு உதவியளிக்கிறது. இளைஞர்கள் பயிற்சி பெற்ற பிறகு, தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். அத்துடன், சமூகக் காப்பீடு முதலிய துறைகளில், பல்வேறு வசதிகளை வழங்கி, ஏழைக் குடும்பங்களுக்கு உதவியளித்தோம். இதனால், விவசாயிகளின் வறுமை பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

சூ செள தொழில் மண்டலத்தின் நிர்வாக வாரியங்கள், உள்ளூர் விவசாயிகளுக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கி, விவசாயிகள் முதலீடு செய்வது தொழில் புரிய ஊக்குவித்துள்ளன என்று எமது செய்தியாளர் அறிந்து கொண்டார்.

பொருளாதார வளர்ச்சி மண்டலம் மற்றும் தொழில் மண்டலத்தின் கட்டுமானத்தில், விளைநிலங்கள் சில பயன்படுத்தப்பட்டதால், உள்ளூர் அரசு, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கியுள்ளது.

இந்த இரு இடங்களிலும், விவசாயிகள், தொழில் நிறுவனங்களில் நுழைந்து தொழிலாளர்களாக மாறுவதால், உள்ளூர் கிராமங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. சியாங் சூ மாநிலத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள ஹுவா சி கிராமத்தின் வளர்ச்சி வேறுப்பட்ட வகையில் அமைந்துள்ளது. இந்தக் கிராமம், ஒரு தொழில் நிறுவனமாக கருத்தப்பட்டு, நிர்வகிக்கப்பட்டது. சட்டை, நெசவுப்பொருட்கள் முதலியவை, முக்கிய வணிக அலுவலாக கொள்ளப்பட்டன. யாங்சி ஆற்று முகத்துவார வட்டாரத்தில் நெசவுத் தொழிலின் மேம்பாட்டைப் பயன்படுத்தி, இக்கிராமம், பரந்துபட்ட சந்தையையும் நிலையான வாடிக்கையாளர்களையும் உருவாக்கியுள்ளது. உள்ளூரின் பொறுப்பாளர் சுன் ஹெய் யென், எமது செய்தியாளிடம் இக்கிராமத்தின் வளர்ச்சி முறையை அறிமுகப்படுத்தினார்:

கிராம நிர்வாகமும், தொழில் நிறுவன நிர்வாகமும் பிரிக்கப்பட்டன. பொருளாதாரத்தை கூட்டாக நிர்வகித்து, ஊழியர்கள் கூட்டாகப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஒரேமாதிரி பயன்கள் வழங்கப்பட்டன. கிராம வளர்ச்சி ஒரே சீராகத் திட்டமிடப்பட்டது என்றார் அவர்.

தற்போது, ஹுவா சி கிராமத்தில், ஹுவா சி கிராம குழுமம் நிறுவப்பட்டுள்ளது. அதில் சுமார் 60 தொழில் நிறுவனங்கள் உள்ளன. அவற்றின் விற்பனை வருமானம், 3000 கோடிக்கு அதிகமாகும்.

சியாங் சூ மாநிலத்தில், முந்தைய பல கிராமங்களும், விளை நிலங்களும், பொருளாதார வளர்ச்சி மண்டலங்களாகவும், தொழில் நிறுவனங்களாகவும் மாறியுள்ளன. அங்குள்ள விவசாயிகளின் வாழ்க்கை முறை மாறி, அவர்கள் புதிய வாழ்க்கையைத் துவக்கியுள்ளனனர்.