• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-31 08:11:14    
ஒன்றே செய், நன்றே செய்

cri

"ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய்" என்று தமிழில் சொல்வார்கள். அதாவது ஏதாவது செய்யும்போது கவனம் சிதறாமல் ஒரே காரியத்தில் கண்ணாக இருந்து செய்யவேண்டும், அந்த செயல் மக்களுக்கு, சமுதாயத்துக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கவேண்டும், அதையும் தாமதப்படுத்தாமல் இன்றே செய்யவேண்டும், பிறகு செய்யலாம் என்று தள்ளிப்போட்டால் அந்த செயல் செய்யப்படாமலே போகலாம் அல்லது செய்வதில் ஈடுபாடு குறைந்துபோகலாம் என்பதை விளக்குவதுதான் "ஒன்றே செய், ஒன்றும் நன்றே செய், அதுவும் இன்றே செய்".

இரு எஜமானர்களுக்கு ஒருவர் வேலை செய்யமுடியாது, காரணம் இரண்டு பேருக்குமே உண்மையான உழைப்பையும், ஈடுபாடுள்ள பங்களிப்பையும் செய்ய முடியாது. ஒருவருக்கு பணி செய்யும்போது, கடமையுணர்வும், உழைப்பாற்றலும், சுமூகமான உறவும் தக்கவைக்கப்படுகிறது, சீராக வளர்ச்சியுறுகிறது.

அதுபோலதான் ஏதாவது செய்யும்போது, அச்செயலில் கவனத்தை முழுவதும் செலுத்த வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளனர். ஏன் நம் பெற்றோர்கள் நமக்கு சொல்லியது நமக்கு நினைவிருக்கலாம். படிக்கும்போது என்னடா பாட்டு கேகுற அல்லது சாப்பிடும்போது என்னடா அது கையில் கதை புத்தகம் என்று திட்டு வாங்கிய நினைவுகள் நமக்கு இருக்கலாம்.

பெற்றோர்கள் சொன்னதை கண்டும் காணாமல் இருந்திருப்போம், அல்லது வெறுப்போடு கேட்டிருப்போம். ஏன் தற்போது நிகழ்ச்சியைக் கேட்கும் குழந்தைகள், இளைஞர்கள் கூட இப்போதும்கூட அவர்கள் பெற்றோர்கள் இதுபோன்று சொல்லும்போது கண்டுகொள்ளாமல் இருக்ககூடும். அப்படியென்றால் உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் பெற்றோர் சொல்வது உண்மைதான். அடடா, பெற்றோர்கள் தொல்லையோடு வானொலியிலும் இந்த அறிவுரையா என்று சலிக்கவேண்டாம். அறிவியலர்கள் செய்த ஆய்வுகள் நமது பெற்றோர்களும், முன்னோர்களும் சொன்னது சரிதான் என்று தற்போது நிரூபித்துள்ளன. தொலைக்காட்சி பெட்டியை பார்த்துக்கொண்டு படிக்கும் வழக்கத்தை இனி நீங்கள் தவிர்ப்பது நல்லது, சரியா இளம் நேயர்களே. காரணம் மல்டி டாஸ்கிங் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும், ஒரே நேரத்தில் பல வேலைகள், செயல்கள் செய்வது தற்போதைய அவசர உலகில் தவிர்க்க முடியாத நிலை உருவாகிவிட்டது என்றாலும், பொதுவாக கவனத்தை திசை திருப்பக்கூடிய, இடையூறாக அமையக்கூடியதாக உள்ள சூழலில் கற்கப்படும் கல்வி, கற்கப்படும் விடயங்கள் பாதிக்கப்பட்டு, பிற்காலத்தில் இந்த தகவல்களை தேவைப்படும்போது நினைவுக்கு கொண்டு வருவதில் சிரமங்கள், சிக்கல்கள் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. விளக்கமாக சொல்லவேண்டுமென்றால், நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே, திரைப்பட பாடலைக் கேட்டுக்கொண்டே பாடப்புத்தகத்தில் இருப்பதை படித்தால் அல்லது ஏதாவது ஒரு புத்தகத்தில் உள்ள தகவலை படித்தால், அது அபோதைக்கு நினைவில் இருக்கலாம், ஆனால் எதிர்காலத்தில் படித்த தகவல் தேவைப்படும்போது அடடா, நாம் படித்தோமே, என்னமோ ஒரு பெயர் ஆயிற்றே, ஏதோ ஒரு இடமாச்சே என்று யோசிப்பதோடு உங்கள் நினைவாற்றல் நின்று விடும், எவ்வளவு முயன்றாலும் மற்றவரது உதவியில்லாமல் அந்த தகவலை நினைவுக்கு கொண்டுவரமுடியாது.