• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-29 19:38:58    
சீன சிறுபான்மை தேசிய இனப்பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு

cri
வறுமை ஒழிப்புக்கான பல்வேறு நடவடிக்கைகளைச் சீனா செயல்படுத்துவதினால் கடந்த ஆண்டு சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்களில் சுமார் 52 லட்சம் பேர் வறுமையிலிருந்து விடுபட்டனர்.
கடந்த ஆண்டு, தொடர்புடைய பகுதிகளின் வழிக்காட்டலில், சிறுபான்மை தேசிய இனப் பிரதேசங்கள், தனித்தன்மை வாய்ந்த பயிர்களை வளர்த்து, சிறுபான்மை தேசிய இனப்பிரதேசங்களில் உழைப்பாளர்களை மற்ற இடங்களுக்கு நகர்த்தியுள்ள விளைவாக, வறுமையிலிருந்து விடுபட்டுள்ளன. சீன அரசு அவையின் வறுமை ஒழிப்பு அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் Huhhot நகரில் நடைபெற்ற சிறுபான்மை தேசிய இனப் பணிக் கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.
சிறுபான்மை தேசிய இனப்பிரதேசத்தில் வறுமை ஒழிப்புக்கான வளர்ச்சி கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் சீனா தொடர்ந்து முழுமையாக்கி ஐந்தாண்டுகளில், மனிதருக்கும் கால் நடைகளுக்கும் நீர் பற்றாக்குறை, மருத்துவ சேவைக்குறைவு முதலிய பிரச்சினைகளை அடிப்படையில் தீர்க்கப் பாடுபடும். இப்பிரதேசங்களில், மின் வசதி, போக்குவரத்து, தொலைக்காட்சி மற்றும் வானொலி வசதி ஆகியவை நனவாக்கப்பட்டு, அங்குள்ள வறியவர்களின் உற்பத்தி வாழ்க்கை நிலைமை மேம்படும்.