• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-02 09:04:24    
பெய்சிங்கில் ஒலிம்பிக் கல்வி

cri

9வது இடைநிலை பள்ளிக்கூட மாணவர்கள் ஒலிம்பிக் கல்வியில் பெற்றுள்ள உணர்வை, தமது நடவடிக்கைகளில் வெளியிட்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, பள்ளிகூடத்தின் சுற்றுப்புற தூய்மையில் மாணவர்கள் மேலும் கவனம் செலுத்துகின்றனர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அவர்கள் மேலும் அக்கறையை அதிகரித்துள்ளனர். முன்பைவிட மேலும் அதிகமான நேரத்தை விளையாட்டுகளில் செலவழிகின்றனர்.

9வது பள்ளிக்கூடம் தவிர, இதர ஒலிம்பிக் கல்வி மாதிரி பள்ளிகூடங்களும் பல வேடிக்கையான நடவடிக்கைகளில் கலந்துகொண்டனர். பெய்சிங் மாநகரின் சுங்வென் பகுதியிலுள்ள குவாங் சி மென் பள்ளிக்கூடத்தின் வாசலின் இரு பக்கங்களிலும் உருவாக்கப்பட்ட பத்து மீட்டர் உயரமுடைய 4 ஒலிம்பிக் பண்பாட்டு சுவர்கள் ஒலிம்பிக்கின் கடந்த காலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை விளக்கிக் கூறுகின்றன. ஹைதியன் பகுதியிலுள்ள யாங் பாங்தியன் மைய துவக்கப் பள்ளிகூடத்தில் உள்ள சிறு மாணவர்கள் ஒரு வகுப்பு, ஒரு நாடு என்ற வடிவத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் துவக்க விழா மாதிரியில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினார்கள். பெய்சிங் மாநகர அரசின் கல்வி கமிட்டிக்கு இன்னொரு திட்டம் உண்டு. அதாவது, பெய்சிங்கிலிருந்து 200 பள்ளிகூடங்களைத் தேர்ந்தெடுத்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் சுமார் 200 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் கமிட்டிகளுடன் ஒன்றுக்கு ஒன்று தொடர்பை உருவாக்குவதாகும். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் போது, இந்த பள்ளிக்கூடங்கள் அதனதன் தொடர்பு நாட்டிடம் அல்லது பிரசேதத்திடம் மொழியையும் பண்பாட்டையும் கற்றுக்கொள்கின்றன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் போது, இந்த பள்ளிக்கூட மாணவர்கள் உரிய பிரதிநிதிகளுடன் ஒலிம்பிக் கிராமத்தில் கொடியேற்ற விழாவில் கலந்துகொண்டு, அவர்களின் போட்டிகளைப் பார்வையிடுவார்கள்.

பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி மற்றும் சீனக் கல்வியமைச்சகத் திட்டத்தின் படி, ஒலிம்பிக் பற்றிய கல்வி இவ்வாண்டு முழு சீனாவிலும் 40 கோடி இளைஞர்களிடையில் மேற்கொள்ளப்படும். இதற்காக, சீனக் கல்வியமைச்சகம் இவ்வாண்டு நாடு முழுவதிலும் 500க்கும் அதிகமான முன்மாதிரி ஒலிம்பிக் கல்வி பள்ளிக்கூடங்களை நிறுவும்.

அடுத்த இரண்டு ஆண்டுகளில், பெய்சிங் ஒலிம்பிக் கமிட்டி ஒவ்வொரு ஆண்டின் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் திங்களில் நாடுமுழுவதிலும் இடைநிலை மற்றும் துவக்க நிலை பள்ளி மாணவர்களிடையில், பசுமை ஒலிம்பிக், அறிவியல் தொழில் நுட்ப ஒலிம்பிக், சமூகவியல் ஒலிம்பிக், ஒரே உலகம், ஒரே கனவு என்ற தலைப்பில் ஒலிம்பிக் கல்வியை மேற்கொள்ளும். இந்த நடவடிக்கையில், படம் எடுப்பது, ஓவியம் தீட்டுவது, கவிதை, அழகு கையெழுத்துக் கலை முதலிய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஒழுக்கப் பயிற்சியை நம்பிக்கையை வலுப்படுத்தும் அதே வேளையில், உடல் பயிற்சியில் ஈடுபட்டு, துணிவு எழுச்சியையும் தனி குணத்தையும் வளர்க்க வேண்டும். இதுவே, ஆற்றல் மிக்க புதிய கல்வி அமைப்புமுறையாகும். எனவே, ஒலிம்பிக்கின் முக்கிய அம்சம், கல்வியாகும். இளைஞர்கள் உலகின் எதிர்காலமாவர். ஒலிம்பிக்கின் எதிர்காலமும் அவர்களே. அவர்களிடையில் ஒலிம்பிக் பற்றிய கல்வியை நடத்துவது, ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் சமூகத்தின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. 9வது இடைநிலை பள்ளிக்கூடத்தின் தலைவர் மா பௌ செங் கூறியதாவது-

ஒலிம்பிக் கல்விக்கான முன்மாதிரி பள்ளிக்கூடங்களை நிறுவுவதன்மூலம், நாங்கள் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு செழுமையான ஒலிம்பிக் கல்வி மரபுரிமை செல்வத்தை தயாரிக்க வேண்டும். சீனாவிற்கும் பெய்சிங்கிற்கும் முழு ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் எங்கள் சொந்த பங்கை ஆற்ற வேண்டும் என்றார்.


1  2