• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-01 17:51:55    
கோச் பட்டெடல்

cri
ராஜா.....கலை உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உடம்பு எடை போட்டு குண்டாக இருப்பவர்களை ஆங்கிலத்தில் couch potato என்று சொல்லி கேலி செய்வார்கள்.

கலை.......ராஜா. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா? சீனாவில் ஓர் ஆண்டில் ஒரு நபருக்கு சராசரியாக 19 கிலோ உருளைக் கிழங்கு உண்ணப்படுகின்றது.

ராஜா......அவ்வளவு தானா ? மேலை நாடுகளில் ஒரு கிலோ உருளைக் கிழங்கை ஒராண்டில் ஒருவர் உண்கிறார். சீனர்களுக்கு உடம்பு ஒல்லியாக இருக்க வேண்டும் என்ற அக்கறை. அப்படித்தானே.

கலை.....இருக்கலாம். சீனர்கள் உருளைக் கிழங்கை வகைவகையாக சமைத்து உண்கிறார்கள். கடந்த மேத்திங்கள் 30ம் நாள் பெய்சிங் நகரில் ஊட்டச் சத்து நிபுணர்கள் செய்தியாளர்களைக் கூட்டி உருளைக் கிழங்கு மீது பிடித்து விட்ட கெட்ட பெயரை நீக்க பிரச்சாரம் செய்தனர்.

ராஜா......அப்படியா? அதைப் பற்றி விளக்க முடியுமா?

கலை....உருளைக் கிழங்கில் மாவுச் சத்து அதிக அளவு உண்டு என்பது உண்மைதான். கார்போ ஹைடிரேட் என்னும் மாவுச் சத்து 100 கராம் உருளைக் கிழங்கில் 17.2 கிராம் உள்ளது. ஆனால் ஒரு உண்மை தெரியுமா? மனிதனுக்கு எரிசக்தி தரும் மிக முக்கியமான பொருள் இந்த மாவுச் சத்துதான். இரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தினமும் தேவைப்படும் எரிச் சக்தியில் 55 விழுக்காடு மாவுச் சத்தினால் கிடைக்கிறது என்று ஐ.நா உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.

ராஜா....அப்படியானால் உருளைக் கிழங்கு சாப்பிட்டால் உடம்பு குண்டாகாதா?

கலை......உடம்பு குணாடாவதும் ஊளைச்சதை போடுவதும் கொழுப்புச் சத்தினால் தான் உருளைக் கிழங்கில் கொழுப்புச் சத்து அவ்வளவாக இல்லை. கொலஸ்ட்ரால் இல்லவே இல்லை. கனிமங்களும் வைட்டமினகளும் மட்டும் அதிக அளவில் இருக்கின்றன. 148 கிராம் எடையுள்ள நடுத்தர உருளைக் கிழங்கில் 25 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கின்றது. இது ஆப்பிளிலும் வாழைப் பழத்திலும் இருப்பதை விட அதிகம். மேலும் 100 கிலோரி வெப்பத்தையும் தருகின்றது.