• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-01 17:51:55    
ஊமையருக்கு இன்ப செய்தி

cri
வணக்கம் நேயர்களே. இப்போது நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நேரம். இன்றைய நிகழ்ச்சியை தி. கலையரசியும் கிளீட்டஸும் உங்களுக்கு ஊமையரின் வாழ்க்கை பற்றி கூறுகின்றோம்.

கிளீட்டஸ்........கலை இப்போது ஊமையரின் வாழ்க்கை பற்றி சொன்னீர்களே. சீனாவின் ஊமையர்கள் பற்றி எனக்கு தெரியாது. அவர்கள் பற்றி கொஞ்சம் விவரிக்கலாமா?

கலை......மகிழ்ச்சிதான். ஊமையர்களுக்கு பேசுவதில் குறைபாடு இருப்பதால் மற்றவருடன் பழகும்போது சைகை மொழி மூலம் உணர்வை பரிமாறிக் கொள்கிறார். சாதாரண மக்களுக்கு சைகை மொழி தெரியாது. ஆகவே மற்றவருடன் பழகும் போது ஊமையர்கள் மிக இன்னலுக்குள்ளாக்கப்படுகின்றனர்.

கிளீட்டஸ்......அப்படியிருந்தால் சீன அரசும் தொடர்புடைய வாரியங்களும் எதாவது முயற்சி செய்துள்ளதா?

கலை.....நீங்கள் கேட்டது நான் இன்றைய நிகழ்ச்சியில் சொல்வதற்கு ஒட்டிய கேள்விதான்.

கிளீட்டஸ்.....அப்படியா. சீக்கிரமாக சொல்லுங்கள். நண்பர்கள் என்னுடன் இணைந்து இன்பச் செய்தியை அனுபவிக்கலாம்.

கலை.....சீன அறிவியல் கழகத்தின் கணிணி தொழில் நுட்ப ஆய்வகம் ஆராய்ந்து தயாரித்த சைகை மொழியை கண்டறியும் பன்நோக்க அமைப்பு முறை ஊமையர்களுக்கு இன்பம் தரும் கருவியாகும்.

கிளீட்டஸ்......இது புதுசு. முன்பு கேள்விப்படதில்லையே.

கலை.....ஆமாம். இது கணிணியும் கை உறையும் இணையும் அமைப்பு முறையாகும். ஊமையருக்கு பேச இவ்வமைப்பு முறை உதவுகின்றது. அதேவேளையில் ஊமையர்கள் மக்களின் பேச்சு மொழி செவிமடுத்து புரிந்துகொள்ள செய்யும். நீங்கள் பாருங்கள்.

கிளீட்டஸ்......வணக்கம்.

மொழி அமைப்பு முறை........வணக்கம்.

கிளீட்டஸ்...... உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மொழி அமைப்பு .....எனக்கும் மகிழ்ச்சி.

கிளீட்டஸ்......உங்களுக்கு என்ன பிடிக்கும்?

மொழி அமைப்பு.......வீதியை வளைந்து சுற்றுலா செய்ய விரும்புகின்றேன்.

கலை.......இந்த உரையாடலை கேட்டு நீங்கள் நம்புவீர்களா?

கிளீட்டஸ்......எனக்கும் நம்ப முடியவில்லை. ஆனால் இது உண்மைதான்.

கலை.....அதிர்ச்சி தேவையில்லை. இது அனைத்தும் சைகை மொழியை கண்டறியும் பன்முக அமைப்பு முறை மூலம் நிறைவேற்றப்படும். இந்த கருவி சீன அறிவியல் கழகத்தின் கணிணி தொழில் நுட்ப ஆய்வகத்தால் ஆராய்ந்து தயாரிக்கப்பட்டது.

கிளீட்டஸ்......கணிணி மூலம் எப்படி சைகை மொழி மூலம் மொழி உச்சரிப்பு ஒலியாக மாற்றப்படுவது?

கலை......இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட டாக்டர் சன் யீ ச்சியாங் விளக்கம் கூறுகின்றார். அவர் கூறியதாவது  

கிளீட்டஸ்.......சைகை மொழியை கண்டறியும் திறன் இந்த சாதாரண கை உறைக்கு உண்டு. ஊமையர்கள் இந்த கை உறையை அணியும் போது சைகை மொழி வடிவத்தை சீன மொழியாக மாற்றப்படும். அது மிக சரியான முறையில் உங்கள் கை வடிவத்தை பதிந்து கொண்டு வளைந்து கொடுக்கும் சைகை மொழி வடிவத்தை சரியான எண்யீட்டு சின்னமாக மாற்றி கணிணியில் சேமிக்கப்படும். கணிணி கை வடிவத்தை வாசித்த பின் மொழி ஒலியாக மாற்றிவிடும்.

கலை......திரு சன் விளக்கத்தை கேட்டு எனக்கு புரிந்தது. அறிவியல் முறையில் ஒவ்வொரு கையுறையில் 18 முன்னேறிய உணர்வை ஊடுறுவி கருவிகளும் ஒரு பின்பற்றும் கருவியும் பொருத்தப்படுகின்றன. நீங்கள் சொன்னது போல கை வடிவம், இடம் ஆகியவற்றை விதிகளின் படி கணிணி கண்டறியக் கூடிய அறிக்குறியாக மாற்றிவிடுகின்றன. அவற்றில் நேரடியான நுண்ணிய அறிகுறி மூலம் 5000க்கும் அதிகமான சைகை மொழிகள் சேமிக்கப்படுகின்றன.