
உலகில் மிகப் பெரிய பணக்காரரான மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில். கேட்ஸிடம் பலர் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத செல்வங்களும் சாதனைகளும் உள்ளன. இருப்பினும், இந்த பணக்காரர் அண்மையில் அமெரிக்க செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிகையில், தாம் உலகில் முதலாவது பணக்காரராக இருக்க விரும்பவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறினார்.

நான் உலகில் முதலாவது பணக்காரராக இருக்க விரும்பவில்லை. இந்த பெயர் எனக்கு நன்மை கொண்டுவரவில்லை என்று பில்.கேட்ஸ் கூறினார். கடந்த வாரம், இணையதளத்தின் புதிய தொழில் நுட்பத்துக்கான முதலீட்டை அதிகரிப்பதாகவும் இது இந்த நிறுவனத்தின் எதிர்கால லாபத்தை பாதிக்கக் கூடும் என்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனம் அறிவித்தது. இதற்கு பங்கு சந்தை உடனே மறுமொழி தந்துள்ளது. இதன் விளைவாக பில் கேட்ஸின் சொந்த நிதியில் ஒரே இரவில் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டது.

உலகில் மிக அதிக அளவில் நன்கொடையை வழங்கும் உள்ளான பில். கேட்ஸ் எப்பொழுதும் தம்மை பற்றி மற்றவரிடம் கூற விரும்புவதில்லை. செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளிக்கவும் விரும்புவதில்லை. ஏனென்றால், முதலாவது பணக்காரர் என்ற முறையில் மற்றவரின் கவனத்தை ஈர்க்க விரும்பவில்லை என்று அவர் விளக்கிக் கூறினார்.
தமக்கு அதிக செல்வாக்கை ஏற்படுத்தியவர் யார் என்பது பற்றி குறிப்பிடுகையில், கோடிக்கணக்கான அமெரிக்க டாலரைக் கொண்டிருப்பவர்களில் வெற்றிகரமான முதலீட்டாளர் பாஃபிட் முதல் இடம் வகிக்கின்றார். ஏனென்றால், அவர் விஷயங்களை மிகவும் எளிதாகவும் சிறந்த முறையிலும் அணுகுகின்றார். ஆகவே பணக்காரர் வரிசையில் அவர் தான் முதல்வர் என்று நான் கருதுகின்றேன் என கூறினார்.
|