• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-03 11:26:48    
உலகில் மிக உயரமானவர்

cri

2006ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்ட உலக சாதனைகளுக்கான நான்காவது சான்றிதழ் வழங்கும் விழா சீனாவின் நூற்றாண்டு நினைவு அரங்கத்தில் நடைபெற்றது. பிரிட்டனில் அமைந்துள்ள கின்னஸ் தலைமையகத்திலிருந்து வந்த பதிவு ஆய்வு அதிகாரி ஒருவர், 2005ஆம் ஆண்டு சீனா விண்ணப்பித்து வெற்றி பெற்ற சில நிகழ்ச்சிகளுக்கு கின்னஸ் உலக பதிவு சான்றிதழ்களை வழங்கினார்.

2.36 மீட்டர் உயரமுடைய சீனாவின் உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பௌ சி சுன் என்பவர், உலகின் முதலாவது அதிக உயரமுடையவராக மாறி, கின்னஸ் சாதனையை படைத்தார். 55 வயதான அவரின் பெற்றோர்களும் சகோதர சகோதரிகளும் சாதாரண உயரத்தில் உள்ளவர்கள். 15வயது முதல், அவர் மிகவும் தீவிரமாக வளரத் துவங்கினார். 2.36 மீட்டர் உயரம் வரை அவர் வளர்ந்துள்ளார். அவருடைய உடல் உயரம், இயல்பான வளர்ச்சியின் விளைவாகும் என்பதை உடல் பரிசோதனை காட்டுகின்றது.

கின்னஸ் சாதனை பதிவுக்காக விண்ணப்பித்த பிறகு, அவருடைய வாழ்க்கையில் அதிக மாற்றங்கள் எற்பட்டுள்ளன. உள்ளூர் செய்தி ஊடகங்கள் அவருக்காக 5 மீட்டருக்கு மேல் உயரமுடைய ஒரு சிறப்பு வீட்டை கட்டித் தந்துள்ளன. தனக்கு பொருத்தமான ஒரு மனைவியைத் தேர்ந்தெடுத்து, குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பது என்பது தமது மிக பெரிய விருப்பமாகும் என்று பௌ சி சுன் கூறினார்.

மெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் காலின். போவல், தாம் கல்வி கற்ற கல்லூரிக்கு பத்து லட்சம் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்க எண்ணுகின்றார். தமது பெயரில் ஒரு கொள்கை ஆய்வு மையத்தைக் கட்டுவதற்காக இந்த தொகையைப் பயன்படுத்தலாம் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். போவலின் நன்கொடை தொகை, ஒரு ஐந்தாண்டு திட்டத்தின் நடைமுறையாக்கத்துக்கு பயன்படுத்தப்படும். காலின்.போவல் கொள்கை ஆய்வு மையத்தை விரிவாக்குவதும், ஆராய்ச்சி நிகழ்ச்சிகளை அதிகரிப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும் என்று நியூயார்க் நகராட்சி நடத்தும் கல்லூரியின் பல அதிகாரிகள் மே திங்கள் 3 ஆம் நாள் கூறியிருந்தனர்.

போவல் 1958ஆம் ஆண்டு இந்த கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். அமெரிக்க படையின் இராணுவத் தலைமை அதிகாரிகளின் இணைப்புக் குழுத் தலைவர் என்ற பதவியிலிருந்து விலகிய பின் 1997ஆம் ஆண்டு இந்த கல்லூரியில் ஒரு கொள்கை ஆய்வு மையத்தை நிறுவினார். முன்னதாக அவர் இந்த மையத்துக்கும் பல முறை நன்கொடை வழங்கியுள்ளார். மிக பெரிய தொகையாக 3 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலரை அவர் வழங்கினார், தமது பெற்றோரின் பெயரில், தலைசிறந்த மாணவர்களுக்கு படிப்புதவி தொகை வழங்குவதற்காக இந்த தொகை பயன்படுத்தப்படுகின்றது.