• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-02 16:00:33    
சில நேயர்களின் கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: மே 17ம் நாள் இடம்பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி பற்றி சேந்தமங்கலம் எம். நந்தகுமார் எழுதிய கடிதம். இவ்வாண்டு நடைபெறும் நானும் நீன வானொலி நிலையமும் என்ற பொது அறிவுப் போட்டி பற்றியும், எப்படி விடைத்தாள் திரட்ட வேண்டும், எப்படி பூர்த்தி செய்து அனுப்பவேண்டும் என்பதை பற்றி நிகழ்ச்சியில் தெளிவாக கூறியமைக்கு நன்றிகள். கேள்வி பதில் நிகழ்ச்சி நேயர்களின் சந்தேகங்களை நீக்கக் கூடிய நிகழ்ச்சியாக அமைகிறது என்று கூறியுள்ளார். தொடர்ந்து சீன வானொலியின் நிகழ்ச்சிகளை கடந்த ஒரு வருடமாக கேட்டு வரும் அன்பர் விழிப்புலனற்ற ஐ. குருநாதன், தன்னை நேயராக இணைக்கும்படி கேட்டுள்ள கடிதம். தங்கள் நிகழ்ச்சிகள் அனைத்தும் கேட்டு வருகிறேன், குறிப்பாக செய்தி மற்றும் செய்தி தொகுப்பு ஆகியவை பயனுள்ளவையாக உள்ளன. கேள்வி பதில் நிகழ்ச்சியின் மூலம் பல அரிய தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது என்று எழுதியுள்ளார். தான் பார்வையற்றவர் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

வாணி: அன்புக்குரிய குருநாதன் அவர்களே, தங்களின் ஆர்வத்தை அறிந்து மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு உரிய நேயர் எண் விரைவில் வழங்கப்படும். ஓரிரு வாரங்களில் தகவல் வராதபட்சம்  எங்களுக்கு தெரியப்படுத்துமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
அதே கருத்தில் தனக்கு நேயர் எண் இன்னும் கிடைக்கவில்லை என திருச்சி கேவாண்டகுறிச்சி அன்பர் த. விக்னேஷ்வரன் எழுதியுள்ளார். அன்பு விக்னேஷ்வரன் அவர்களே, விரைவில் உங்களுக்கு உரிய நேயர் எண் பற்றிய தகவல் கொண்ட கடிதம் அனுப்பப்படும். ஓரிரு வாரங்களில் தகவல் வரவைல்லையெனில் எமக்கு அறியத்தரவும்.

க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி நேயர் மு.மு.அமீன் எழுதிய கடிதம். மே 17ம் நாள் இடம்பெற்ற செய்தித் தொகுப்பில் வூ பாங்கோ அவர்களின் ஐரோப்பிய பயணம் பற்றியும், ஈரானுக்கு மென்னீர் அனு உலைகலன் வழங்குவது பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் பற்றியும் கேட்டறிந்தேன். நேருக்கு நேர் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட நேயர் மன்றத்தின் துணைத் தலைவர் ஜி.பிரபாகரன் மலர்விழி அவர்களுக்கு அளித்த பேட்டியில், நிகழ்ச்சிகளை பற்றியும், அவற்றில் என்ன மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்பது பற்றிய அவரது கருத்துக்களையும் அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து திருச்சி,திருவானைக்காவல் நேயர் ஜி.சக்ரபாணி எழுதிய மே 22ம் நாள் ஒலிபரப்பான சீன சமூக வாழ்வு நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். நிகழ்ச்சியில் சீனர்கள் புதுவகையில் திருமண விழாக்களை நடத்துவதை அறிந்தோம். ஹோட்டலில் திருமணம், கடலுக்கு அடியில் திருமணம், இணைய தளத்தில் திருமணம், வானத்தில் திருமணம் போன்ற தகவல்களை கேட்டு ரசித்தோம். கடலுக்கடியில் திருமணம் என்பது வியப்பான தகவல் என்று குறிப்பிட்டுள்ளார்.