• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-03 09:13:07    
லுங்மன் கற்குகையைப் பார்வையிடுவது

cri

மத்திய சீனாவின் ஹொனான் மாநிலத்தைச் சேர்ந்த புராதன நகரான லொயாங், சீனத் தேச நாகரீகத்தின் துவக்க இடங்களில் ஒன்றாகும். இந்நகரில் அமைந்துள்ள லுங்மன் கற்குகை சுமார் 1500 ஆண்டு கால வரலாறுடையது.

லுங்மன் கற்குகை, லுயாங் புறநகரின் தெற்கிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் நேரெதிர் நிலையில் மலைகள் உள்ளன. நடுவில் ஈஹொ ஆறு ஓடுகின்றது.

எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலமான இவ்விடம் மக்களுக்கு ஏற்ற பருவ நிலை கொண்டது. கிழக்கு மற்றும் மேற்கு மலைகளின் சுமார் ஒரு கிலோமீட்டர் நீளமுடைய கற்பாறையில் 2300க்கும் அதிகமான கற்குகைகள் செதுக்கப்பட்டுள்ளன.

இக்கற்குகைகளுக்குள் 10 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தர் உருவச்சிலைகளைப் பண்டை காலச் சீனத் தொழிலாளர்கள் செதுக்கினர். இவ்வற்றைச் செய்தவர்கள் யார்?காரணம் என்ன?என்று லுங்மன் கற்குகையில் பயணம் மேற்கொள்வோர் கேட்பது இயல்பே.

கி.பி.500ஆம் ஆண்டு காலப் பகுதியில், சீனாவின் பெய்வெய் வம்சக் காலத்து பேரரசர் புத்த மத நம்பிக்கையுடையவர். எவ்வளவு புத்தர் உருவச்சிலைகளைச் செதுக்கப்படுகிறதோ புத்தர்கள் அவ்வளவுக்கு புத்தர் பயன் தருவர் என்று அப்போது கூறப்பட்டது.

இதனால், அதிகமான புத்தர் சிலைகளைச் செதுக்க வேண்டும் என்று பெய்வெய் வம்சக் காலப் பேரரசர் முடிவு செய்தார். அப்படியானால், ஏன் லுங்மன் என்னும் இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? லுங்மன் கற்குகை அமைந்துள்ள இவ்விடத்தின் கற்பாறை தரமானதாக உள்ளது.

சிலைகள் செதுக்க உகந்தது என்பது இதற்கு முக்கிய காரணம் ஆகும். 400க்கும் அதிகமான ஆண்டுகள் கால உழைப்பு மூலம் லுங்மன் கற்குகை தற்போதைய அளவைக் கொண்டுள்ளது.

இதுவரை பாதுகாப்பாக இருக்கும் இக்கற்குகையிலுள்ள 90 விழுக்காட்டுக்கு மேலான சிறிய குகைகள் கி.பி.400ஆம் நூற்றாண்டு முதல் 600ஆம் நூற்றாண்டு வரையான பெய்வெய் வம்சக் காலத்திலும் கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையான தாங் வம்சக் காலத்திலும் செதுக்கப்பட்டன.

லுங்மன் கற்குகையில் பணி புரியும் யாங்சியௌதின் கூறியதாவது, இவற்றில் சாக்கியமுனியின் உருவச்சிலை குறிப்பிடத்தக்கது என்றார் அவர். பெய்ச்சிங் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் இயல் பேராசிரியர் மாஸ்சாங் கூறியதாவது,

ஒரு மதத்தின் உள்ளடக்கம், ஒரு நாட்டின் வரலாறு, பொருளாதாரம், கலை, பண்பாடு ஆகியவை லுங்மன் கற்குகையிலிருந்து காணப்படலாம் என்றார் அவர். குயாங் குகையானது, லுங்மன் கற்குகையில் மிகவும் முன்னதாக செதுக்கப்பட்ட ஒன்று.

வடக்குவெய் வமிச காலத்தைப் பிரதிபலிக்கும் மற்றொரு கற்குகை இதுவாகும். இக்குகையில் புத்தர் உருவச்சிலைகள் பல உள்ளன. புத்தர் உருவச்சிலைக்கு முன் விளக்கங்கள் உண்டு.

இவற்றைச் செதுக்கியவர்களின் பெயர், செதுக்கிய நாள், காரணம் ஆகியவை இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வடக்குவெய் வமிச காலத்தில் நேர்த்தியான கையெழுத்துக்கள் மற்றும் செதுக்கல் கலையை ஆராய்வதற்கு மதிப்புள்ள தகவல்கள் இவை.

சீன கையெழுத்து வரலாற்றில் மைல் கல்லாக விளங்கும் லுங்மன் 20 பொருட்களில் பெரும்பாலானவை இவ்விடத்தில் குவிந்துஇருக்கின்றன.

லுங்மன் கற்குகையில் ஏராளமான மதம், நுண்கலை, ஓவியம், நேர்த்தியான கையெழுத்துக்கள், இசை, உடுப்பு, நகை, மருத்துவம், மருந்து, கட்டடம், சீன மற்றும் வெளிநாட்டுப் போக்குவரத்து ஆகியவை பற்றிய பொருட்களும் வரலாற்று தகவல்களும் உள்ளன.

இதனால், இது, பெரிய ரக கல் செதுக்குதல் கலை அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது. உலகப் பண்பாட்டு மரபுச்செல்வத்தைத் தேர்ந்தெடுக்கும் வரைமுறைப் படி லுங்மன் கற்குகை 2000ஆம் ஆண்டு நவம்பர் 30ந் நாள் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

லுங்மன் வட்டாரத்திலுள்ள கல்குகைகளும் புத்தர் உருவச்சிலைகளும் சீனாவின் வடக்குவெய் வமிச காலத்தின் பிற்காலத்திலும் தாங் வமிச காலத்திலும் (கி.பி.493-907) மிக பெரிய அளவிலான கலை வடிவத்தைப் பிரதிபலித்துள்ளன.

மதக் கருப்பொருளை வர்ணிக்கும் இந்த கலைப் படைப்புகள் சீனாவின் கல் செதுக்கல் கலையின் உயர்ந்த நிலையைச் சித்திரிக்கின்றன என்று உலக மரபுச்செல்வ ஆணையம் மதிப்பீடு செய்துள்ளது.