சீன வீரர் லியு சியான் ஆண்களுக்கான 110 மீட்டர் தடை ஓட்ட பந்தயத்தில் வென்றுள்ள சாதனை புதிய உலக சாதனையாக சர்வதேச தடகள சம்மேளம் இன்று அறிவித்தது. ஜுலை திங்கள் 11ம் நாள் ஸிவிட்சர்லாந்தில் நடைபெற்ற தடை ஓட்ட பந்தயத்தில் அவர் 12 வினாடிக்கு 88 நேரத்துடன் முதலிடம் ஈட்டியதோடு உலக சாதனையை முறியடித்தார். முந்திய உலக சாதனை 12 வினாடிக்கு 91 என்பதாகும். 2004ம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் லியு சியான் உலக சாதனைக்குச் சமமான மதிப்பெண்ணுடன் தங்க பதக்கத்தை பெற்றார்.
|