• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-23 20:39:40    
உலுங் தேநீர்

cri

சியாமென் நகர் தென் கிழக்கு சீனாவின் கடலோரத்தில் அமைந்துள்ளது.

அதன் உயரிய வாழ்க்கைச் சூழல், பழமை வாய்ந்த பண்பாட்டுச் சிறப்பு, இயற்கைக் காட்சி ஆகியவை பயணிகளின் மனதை மிகவும் கொள்கை கொள்கிறது.

அப்படியிருக்க, நீங்கள் பயணத்தின் போது சியாமென் தேநீரகத்துக்குச் சென்று ஒரு கோப்பை தேநீரை அருந்தினால் இந்நகரின் தனிச்சிறப்பையும் தொடர்புடைய தேநீர் பண்பாட்டையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தேநீர் குடிப்பது, சியாமென் மக்களின் வாழ்க்கையில் பொதுவான ஒரு வழக்கமாகும். பலர் காலையில் படுக்கையை விட்டு எழுந்தவுடனே பின் செய்யும் முதலாவது காரியம், தேநீர் தயாரிப்பது. உ லுங் தேநீரைக் குடிப்பது சியாமென் மக்களுக்கு முகவும் விருப்பமானது.

இந்தத் தேநீர், பச்சை தேயிலை மற்றும் கறுப்பு தேயிலை உற்பத்தி முறையை ஆராய்ந்து கலந்து செய்யப்பட்டதாகும். ஆகவே அது கறுப்பு தேநீரின் சிறப்பையும் பச்சை தேநீரின் நறுமணத்தையும் கொண்டிருக்கிறது.

உ லுங் தேநீர், உடல் கொழுப்பைச் சிதைத்து, பருமனைக் குறைத்து, அழகுப்படுத்தும் மருத்துவ பண்பைக் கொண்டிருக்கிறது. ஜப்பானில் இது அழகுப்படுத்தும் தேநீர் என அழைக்கப்படுகிறது.