• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-30 09:03:19    
லிச்சியாங் ஆற்றங்கரை

cri

தென் மேற்கு சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வட கிழக்கு பகுதியிலுள்ள குவெய்லின் நகரிலிருந்து யாங்சுக்குச் செல்லும் 84 கிலோமீட்டர் நீளமுடைய லிச்சியாங் ஆற்றங்கரைப் பகுதி, இயற்கை அழகு சிறந்துகாணப்படும் முக்கிய பகுதியாகும். பச்சைப் பட்டுத் துணி நாடா போல, ஏராளமான மலைகளுக்கிடையில் ஓடிவருகின்ற நதி மிகவும் நீளமான ஒரு ஓவியம் போல காட்சியளிக்கின்றது.

ஒரு கன மீட்டர் ஆற்று நீரில், மணல் அளவு 0.037 கிலோகிராம் மட்டுமே. தூய்மையான ஆற்று நீரில் நீந்திச்செல்லும் மீன்களை எண்ணிவிடலாம். கி.மு. 200ஆம் ஆண்டில், குவெய்லின் நகரின் தென்கிழக்கிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலுள்ள லிச்சியாங் ஆற்றின் வட கரையில் கட்டப்பட்ட தொன்மை வாய்ந்த தாசியு நகரம், இந்த எழில் மிக்க இயற்கைக் காட்சித் தலத்தில் அமைந்துள்ளது.

சுமார் 5 கிலோமீட்டர் நீளமான பழமை வாய்ந்த கற்பாதையொன்று இந்த நகரின் ஊடாகச் செல்கின்றது. வீதியின் இரு பக்கங்களிலும் 100 ஆண்டுகள் பழமையான செங்கல் வீடுகள் உள்ளன. எழில் மிக்க லிச்சியாங் ஆற்றுக் காட்சியினால், அதிகமான உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் வருகை தருகின்றனர்.