• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-04 16:39:47    
49வது உலக துப்பாக்கி சுடும் போட்டிகள்

cri

க்ரோவேஷியாவின் சாக்ரேப் நகரில் கடந்த 22ம் நாளன்று சர்வதேச துப்பாக்கி சுடும் விளையாட்டு கூட்டமைப்பின் 49வது உலக துப்பாக்கி சுடும் போட்டிகள் துவங்கியது நாம் அறிவோம். 107 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 2000த்துக்கும் அதிகமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறும் 15 விதமான விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு வகை போட்டிகள் கொண்ட இந்த 49வது உலக துப்பாக்கி சுடும் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் போட்டிகளில் மூலம் 54 பேர் 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள். பல்வேறு வகையான துப்பாக்கிகள் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிக்கள் நடைபெறுகின்றன.

இதில் கடந்த சில தினங்களில் வெற்றி பெற்ற சிலரை இப்போது அறியத்தருகிறோம்.

ஆண்கள் ஏர் ரைஃபில் பிரிவில் இந்தியாவின் 23 வயது அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் பெற்றார். மூன்றாவது முறையாக இந்த போட்டிகளில் கலந்துகொண்ட அபினவ் இம்முறை முதலிடம் பெற்று இப்பிரிவின் உலக சாம்பியனாகியுள்ளார். ரொமேனியாவின் அலின் ஜார்ஜ் மால்டோவேனு இரண்டாவது இடமும், சீனாவின் சினான் ஷு மூவது இடத்தையும் பெற்றனர்.

பெண்கள் ஏர் ரைஃபில் பிரிவில் 2003ம் ஆண்டில் வெற்றி பெற்ற சீனாவின் லீ டு, இம்முறையும் முதலிடத்தை பெற்ற்ய் உலக சாம்பியனாகியுள்ளார். கடந்த முறை சாம்பியனாக வெற்றி பெற்ற செக் குடியரசின் காட்ரீனா குர்கோவா இம்முறை இரண்டாமிடத்தில்.

ஆடவர் ஃப்ரீ பிஸ்டல் பிரிவில் சீனாவின் சோங்லியாங் டேன் தனது உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்கவைத்துள்ளார்.

பெண்கள் ஏர் பிஸ்டல் பிரிவில் ரஷ்யாவின் நாடாலியா பேடரீனா புதிய உலக சாம்பியனானார். சீனாவின் சுன் ஹூ இரண்டாம் இடம் பெற்றார்.

ஆடவர் ப்ரோன் ரைஃபில் பிரிவில் உலக சாதனையாளராக இருந்தபோதும் உலக சாம்பியன் போட்டியில் இதுவரை வெற்றி பெறாமல் நின்ற பெலாரஸின் செர்கெய் மார்டினோவ் 49வது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் வெற்றியாளராகி நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளார். கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் வெண்கலம் வென்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கான 50மீட்டர் தொலைவு, 3 இலக்கு பிரிவில் ரஷ்யாவின் லியோபோவ் கால்கினா வெற்றி பெற்றார்.

பெண்கள் ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் பிரிவில் சீனாவின் யிங் சென் முதலிடம் பெற்று உலக சாம்பியனாகியுள்ளார், சீனாவின் ஃபிரெக்ஜி ஃபெய் இரண்டாமிடம் பெற்றார்.

25 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு உலக சாம்பியனாகியுள்ளார் கனடா நாட்டு சூசன் நட்ராஸ். 1974ம் ஆண்டில் பெண்கள் ட்ராப் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்ற சூசன் நட்ராஸ், 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே பிரிவில் அதே முதலிடத்தை பெற்றுள்ளார். சரவதேச அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றியாளாராகவும், சிறந்த போட்டியாளராகவும் இருந்து வருகிறார் சூசன் நட்ராஸ்.