• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-04 16:42:10    
யூவானான் மாநிலத்தின் நாட்டுப்புறப்பாடல் பாடகி ஹோவான்

cri

வான் ஹோன், மேலும் நன்றாக பாட, யூவானான் மாநிலத்தின் தனியார் இசைக் சார்பற்ற கலைஞர்களிடம் கற்றுக் கொண்டார்..

தவிரவும், புகழ்பெற்ற இசை நாடிகர் மே லான் வான், சாங் சியாங் யூ ஆகியோரிடமிருந்து, இசை நாடகத்தை கற்றுக் கொண்டு, சைடான்சூமான், கூ சோன் முதலிய புகழ்பெற்ற பாடகர்களிடமிருந்து குரல் வளப்பயிற்சி எடுத்தார். இதன் விளைவாக, வான் ஹோ, பாடுகின்ற யூவானான் நாட்டுப்புறபாடல், முன்பைவிடதனிச்சிறப்பை நிலைநிறுத்துவதோடு, வாழ்க்கை, உணர்வு ஆகியவற்றின் தேவைக்கிணங்க, பல்வேறு புகழ்பெற்ற ஆசிரியர்களின் மேம்ப்பாட்டை சேர்ந்து, மேன்மையான உறுதியான சம நிலையில் பாடுகின்ற தனிச்சிறப்பு வாய்ந்த வகை உருவாக்கினார். இப்போது, நாம் அவர் பாடுகின்ற யூவானான் நாட்டுப்புறப்பாடலான, மலை நாட்டுப்புறப்பாடலின் நல்ல துவக்கம் என்னும் பாடலை கேட்கலாம்

இப்போது நீங்கள் பிற நாட்டுப்புறப்பாடலான, குதிரைகளை விடுவிப்பது என்னும் பாடலை கேட்டு ரசியுங்கள், இந்த பாடல், ஹாங்வான் ஹோ பாடுகின்ற பிரதிநிதித்துவம் வாய்ந்த பாடல்களில் ஒன்றாகும். பீடபூமியில் வாழ்கின்ற மேய்ப்பர்களின் வாழ்க்கையை இப்பாடலில் காணப்படலாம். முழு பாடலும் மகிழ்ச்சி உணர்வை பிரதிபலிக்கிறது.

ஹாங்வான் ஹோ, பாடகியும் மட்டுமல்ல, திறமை மிக்க தொகுப்பாளரும் ஆவார். இது வரை. அவர், தொகுத்த பாடல்களின் எண்ணிக்கை, சுமார் நூறு ஆகும். பல பாடல்கள் அவர் பாடிய பின்தான், பிரபலமாயின் இனி, அவர் இசைத்த யூவான்னான் நாட்டுப்புறப்பாடல், பூ தைக்கப்பட்ட காலணி, ஆற்றில் இழந்தது என்னும் பாடல் கேட்கலாம். இது ஒரு வேடிக்கை நிறைக்க காதல் பாடலாகும்.

அவர், சீனாவின் கலை பிரதிநிதி குழுவுடன் இணைந்து போலந்து, ருமேனியா, ஜப்பான், மியன்மர் முதலிய நாடுகளில் பயணம் மேற்கொண்டார். ஆக்கப்பூர்ம பாடல் ஒலியுடன் சீன பல்வேறு நாடுகளின் மக்களுக்குமிடையில், பல நட்பு பாலங்களை உருவாயுள்ளார்.

அடுத்து, அவர் பாடிய மலையை சுற்ரி விளையாடுவோம் என்ற நாட்டுப்புறப்பாடலை கேளுங்கள். மலைகளை ஏறி விளையாடுவது என்பது, யூன்னான் மாநிலத்தின் ஒரு பாரம்பரிய நடவடிக்கையாகும். வசந்த காலத்தின் இறுதியிலும், கோடைகாலத்தின் துவக்கத்திலும், மக்கள், நகரப்புறங்களுக்குச் சென்று, குதிரை போட்டியை பார்க்கின்றனர். ஊள்ளூர் மக்கள் இதை மலைகளில் ஏறி விளையாடுவது என்பது அழைத்தனர். இந்த நடவடிக்கையின் முக்கிய பகுதி, மலை பற்றிய நாட்டுப்புறப்பாடல்களை ஒவ்வொருவரும் பாடுவதாகும்.

1989ம் ஆண்டு, ஹாங்வான் ஹோ, சீனாவின் இசை தொகுதி துறையிலான மிக உயர் நிலை பரிசான தங்க இசை தொகுதி பரிசு பெற்றார்.