ஹசாக் இன மக்கள் நாடோடி வாழ்க்கையை நடத்துகின்றனர். இதனால் அவர்களின் பாடலில் மேய்ச்சல் பண்பு வாய்ந்தது.ஹசாக் இன மக்களிடையே, துங்புலா எனப்படும் தேசிய இன இசை கருவியை தாமாகவே இசைத்து பாடலைப் பாடுவது மிகவும் வரவேற்கப்படுகிறது. நீரூற்றுக்கு பாராட்டு என்ற பாடல் இப்பாணியைச் சேர்ந்தது. "நீரூற்றே, நீரூற்றே, நீ இரவும் பகலும் இடைவிடாமல் பாய்ந்து வருகிறாய். சிறுவனாக இருந்தது முதல் நான் உன்னை விரும்புகின்றேன். இளைஞர்களும் மங்கையரும் உனக்கு அருகில் அமர்ந்து காதலில் மூழ்கி உன்னுடன் பாடுகின்றனர். எங்கெங்கும் நாங்கள் சென்றாலும், உன்னை விட நல்ல இடத்தை காணவில்லை" என்று இப்பாடல் ஒலிக்கிறது.
|