• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-07 22:34:46    
சீன அரசுசார் தொழில் நிறுவனத்தின் வளர்ச்சி

cri

சீன அரசு அதிகாரிகள், அரசு சார் தொழில் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் ஆளுனர்கள் ஆகியோர், அண்மையில், சீனாவின் அரசுசார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியில் தற்சார்பு புத்தாக்கம், ஆற்றிய பங்கையும் பயனையும் பற்றி விவாதித்தனர். தற்சார்பு புத்தாக்கம், சீனாவின் அரசுசார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியின் இயக்க ஆற்றலாக மாறி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் இந்நிறுவனங்களின் போட்டியாற்றலை தொடர்ந்து உயர்த்திக்கொண்டுள்ளது என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

அரசுசார் தொழில் நிறுவனங்கள் சீனப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் 500 முன்னணி தொழில் நிறுவனங்களில் இடம்பெறும் சீனாவின் 18 தொழில் நிறுவனங்களில், 15 அரசுசார் தொழில் நிறுவனங்கள் உள்ளன. அரசுசார் தொழில் நிறுவனங்கள் தற்சார்பு புத்தாக்கத் திறனை வலுப்படுத்துவதை ஊக்குவிப்பதில், சீன அரசு மிகவும் கவனம் செலுத்துகிறது. சீனத் தேசிய சொத்து கண்காணிப்பு மற்றும் நிர்வாகக் கமிட்டியின் துணை இயக்குநர் வாங் ரை சியாங் இது பற்றி கூறியதாவது:

புத்தாக்கமயமாக்க நாட்டைக் உருவாக்கும் பொருட்டு, தற்சார்பு புத்தாக்கத்தில் தொழில் நிறுவனங்களை முதுகெலும்பாகவும், சந்தையை வழிக்காட்டுத் திசையாகவும் கொள்ளும் தொழில் நுட்ப புத்தாக்க அமைப்பு முறையை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.

பல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், பெரிய அரசுசார் தொழில் நிறுவனங்களின் தற்சார்பு பத்தாக்கம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சி திறன் பெரிதும் உயர்த்தப்பட்டு, சாதனைகள் பெற்றுள்ளன. கடந்த 5 ஆண்டுகளி்ல், இந்தத் தொழில் நிறுவனங்கள் அறிவுசார் சொத்துரிமை பெற விண்ணப்பிக்கும் எண்ணிக்கை, ஆண்டுக்கு சராசரி 28 விழுக்காடு அதிகரித்துள்ளது. அத்துடன், நிர்வாக மற்றும் அமைப்பு முறையின் கட்டுமானத்திலான புத்தாக்கத் திறன் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வாங் ரை சியாங் கூறினார்.

45 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சீனாவின் கொஸ்கோ குழுமம், கப்பல் போக்குவரத்தையும் பின்னணி சேவையையும் முக்கிய வணிகமாக கொள்ளும் பெரிய ரக அரசுசார் தொழிற்குழுமமாகும்.

கடந்த சில ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்த இக்குழுமத்தின் வணிக அளவு தொடர்ந்து விரிவாக்கப்பட்டுள்ளது. உள் நிர்வாகம் மற்றும் அமைப்பு முறை கட்டுமானத்தின் புத்தாக்கத் திறனில், கொஸ்கோ குழுமம் கவனம் செலுத்தி வருகிறது என்று இக்குழுமத்தின் ஆளுனர் வெய் சியா புஃ தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

வளர்ச்சியடையும் பொருட்டு, சந்தையின் கோரிக்கைக்கு பொருந்திய கட்டமைப்பைக் கொண்ட நிர்வாக அமைப்பு முறையை உருவாக்கியுள்ளோம் என்றார் அவர்.

துவக்கத்தில் 4 கப்பல்களை கொண்ட கப்பல் போக்குவரத்து தொழில் நிறுவனமாக இருந்து, கோஸ்கோ தற்போது 600க்கு கூடுதலான நவீன வணிகக் கப்பல்களைக் கொண்டு, ஆண்டுக்கு 30 கோடி டன்னுக்கு மேலான சரக்கு போக்குவரத்து கொண்ட ஒட்டுமொத்த பன்னாட்டு தொழில் குழுமமாக மாறியுள்ளது.

வெற்றிகரமான அனுபவத்தைத் தொகுத்து கூறிய வெய் சியா புஃ, தற்சார்பு புத்தாக்கம், கடந்த சில ஆண்டுகளில், கொஸ்கோ குழுமம், வேகமாக வளர்ச்சியடைந்ததன் இயக்க ஆற்றலாகும். தவிர, ஒருமைப்பாட்டு நவீனமயமாக்க தொழில் நிறுவன நிர்வாக அமைப்பு முறை நிறுவப்படுவதும், நிர்வாக நிலை உயர்த்துவதும், குழுமத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையை இட்டன.