• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-07 22:50:17    
உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள்

cri

சர்வதேச தடகள கூட்டமைப்பின் 182 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் வருகின்ற ஆகஸ்ட் 15 முதல் 20ம் நாள் வரை சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெறவுள்ள 11வது உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அறியப்படுகிறது. ஜூலை 31ம் நாள் நள்ளிரவு வரையில் இந்தப் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக விண்ணபிக்க அளிக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் ஜூன் மாதம் வரை 179ஆக இருந்த எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச தடகள கூட்டமைப்பில் மொத்தம் 212 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 182 உறுப்பினர்கள் இந்த இளையோர் நிலை தடகள போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அளவிலான பங்கேற்பு என்று கூறப்படுகிறது. 1986 முதல் ஈராண்டுகளிகு ஒருமுறை நடைபெறும் இந்த இளையோர் நிலை உலக தடகள போட்டிகளில் இதற்கு முன்பாக அதிகபட்சமாக 1998ம் ஆண்டில் 170 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பங்கேற்றன. இந்த இளையோர் நிலை தடகள போட்டிகள் வழமையாக உலக தடகள நட்சத்திரங்கள், உலக சாதனையாளர்களின் தொட்டிலாக அமைகின்றன. கடந்த கால அனுபவங்களின்படி குறிப்பிடத்தக்க வீரர்களும், வீராங்கனைகளும் இந்த இளையோர் நிலை போட்டிகளில் பங்கேற்று பின் உலக அரங்கில் தடகள போட்டிகளில் தங்களது பெயரை பொன்னெழுத்துக்களில் பொறித்தும் உள்ளனர். பெய்சிங் 2006 உலக இளையோர் தடகள போட்டிகளும் இதற்கு விதிவிலக்காக அமையாது என்பது பரவலான எதிர்பார்ப்பு.

பிரிட்டன் நாட்டு காலின் ஜாக்சன், எத்தியோப்பியாவின் , மெஸரத் டெஃபார், டெரார்டு டுலு மற்றும் ஹைலே ஜெப்ரேலாசி, ரொமேனியாவின் காப்ரியேலா சாபோ, சீனாவின் வாங் சுன்ஷியா, அமெரிக்காவின் ஆடம் நெல்சன், ஈகுவாடரின் ஜெஃபர்சன் பேரேஸ், ஜமைக்காவின் வெரோனிக்கா காம்பெல், ஸ்வீடனின் காரலீனா க்ளஃப்ட், கியூபாவின் ஓஸ்லேடிஸ் மெனென்டஸ், ஆஸ்திரியாவின் ஜானா பிட்மேன் என்ற நீண்ட ஒரு பட்டியல் இத்தகைய வீரர், விராங்கனைகள் (ஜூனியர் நிலை) இளையோர் நிலை போட்டிகளினூடாக உலக அரங்கில் நட்சத்திரங்களாக மின்னியுள்ளமைக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. எனவே இந்த இளநிலை போட்டிகளில் வெற்றியாளர்களாக நிற்கும் பலரை அடுத்த இரண்டு ஆண்டுகளில் பெய்சிங் 2008 ஒலிம்பிக்கில் மீண்டும் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம்.

மகளிர் ஆசிய கோப்பை கால்பந்தாட்டம்

மகளிர் ஆசிய கால்பந்தாட்ட கோப்பையை சீனா வெற்றி பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்த ஆசிய அளவிலான மகளிர் கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 - 4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது சீனா. இறுதியாட்டத்தின் முதல் பாதியில் இரண்டு கோல அடித்து முன்னிலையில் நின்ற ஆஸ்திரேலிய அணியை இரண்டாம் பாதியில் இரு கோல்கள் அடித்து திணறடித்த சீன அணி, போட்டியின் கூடுதல் நேரத்திலும் சமநிலையை விட்டுக்கொடுக்காமல் நின்றதால், பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது. இதில் சீன அணியின் சாங் யான்ரு ஆட்ட நேரம் இறுதியாவதற்கு முன்பே சப்ஸ்டிடியூட்டாக (பதிலியாக) களமிறக்கப்பட்டதன் மூலம் பெனால்டி ஷூட் அவுட்டில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இரண்டு முறை அடித்த பந்துகளை தடுத்து சீனாவுக்கு வெற்றி தேடி தந்தார். ஆசிய கோப்பையின் சிறந்த ஆட்டநாயகியாக சீனாவின் மா ஷியாஷு தேர்ந்தெடுக்கப்பட்டார்.