• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-07 23:14:00    
அந்நியர் எவ்வாறு வார விடுமுறையைக் கழிக்கிறார்கள்?

cri

நெதர்லாந்தில்

நெதர்லாந்து மக்கள், வார விடுமுறையில் மலர்களையும் செடிகொடிகளையும் வளர்ப்பதில் அதிக நாட்டம் செலுத்துகிறார்கள். சிறப்பாக, அவர்கள் TULIP எனப்படும் மணி போன்ற மலரை மிகவும் விரும்புகிறார்கள். வார விடுமுறை நாட்களில், இளம் காதலர்கள், நடுத்தர வயதுடைய தம்பதிகள், முதிய தம்பதிகள் அனைவரும் இத்தகைய மலர்களை, பரஸ்பரம் அன்பளிப்பாக பரிமாறிக்கொள்கின்றனர். அல்லது இந்த மலர்களை எடுத்துக்கொண்டு தமது உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் சென்று பார்ப்பார்கள்.

பிரிட்டனில்

ஆங்கிலேயர் வார விடுமுறையில் செய்தியேடுகளையும் நூல்களையும் படிக்கவும் கல்வி ஆய்வில் ஈடுபடவும் விரும்புகிறார்கள். ஒரு கருத்துக்காக அல்லது ஒரு தலைப்புக்காக அவர்கள் மும்முரமாக வாதப்பிரதிவாதம் செய்கிறார்கள்.

பின்லாந்தில்

பின்லாந்தில் தாய்மார்கள் வார விடுமுறை வருவதற்கு முன்பே, பல்வேறு ஆயத்தங்களைச் செய்து முடிப்பார்கள். தமது பிள்ளைகளின் படுக்கையறையில் ஒரு மேசையை வைத்து, அதன் மேல் மலர் செண்டுகளையும் கேக் போன்ற இனிப்பு சிற்றுண்டிகளையும் வைத்திருப்பார்கள். அடுத்த நாள் அதிகாலையில் குடும்பத்தினர் அனைவரும் பிள்ளையின் அறைக்கு வந்து ஆடிபாடுவார்கள். இனிப்பு சிற்றுண்டிகளையும் உட்கொண்டு மகிழ்வார்கள்.

கிரேக்க நாட்டில்

அங்குள்ள மக்கள், கோலாகலமாக வார விடுமுறையை கழிக்கிறார்கள். உணவகம், மது இருந்துமிடம் முதலிய இடங்களில் குழுமி இரவு முழுவதும் உற்சாகமாக இருக்கிறார்கள்.

ஜெர்மனியில்

ஜெர்மன் மக்கள் வார விடுமுறையில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இசை கேட்டு, ரசிக்கிறார்கள். அல்லது அஞ்சல் தலை சேகரிப்பதிலும் படப்பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். வேறு சிலர் பான விருந்து நடத்தி தமது உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வார விடுமுறையைக் கொண்டாடி மகிழ்வார்கள்.