• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-09 08:51:46    
மருந்து 5

 


cri
காசநோய் என்ற பேச்சைக் கேட்டதும் கிழவிக்கு சுருக் கென்றது. முகம் வெளிறிப் போனது. எனினும், வலியப் புன்னகையை உடனே வரவழைத்தபடி, ஏதோ ஒரு சாக்கில் அங்கிருந்து அகன்றாள். இதற்கிடையில் கரும்பழுப்புச் சட்டை அணிந்த தடியான ஆள் எதையும் லட்சியம் செய்யாமல் உரத்த குரலில் பேசிக் கொண்டே இருந்தான். கடைசியில் மச்சுவீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் விழித்துக் கொண்டு, இருமத் தொடங்கி விட்டான்.

"பெரிய சுவான் சிரிச்சிக்கிட்டே இருக்கறதுல காரணம் இல்லாம இல்லே நீ சின்னச் சுவானுக்கு கொண்டு வந்த அதிர்ஷ்டத்துனால அவனுடைய சீக்கு முழுசா குணமாகப் போகுது பாகு" என்று நரைத்தாடிக் கிழவன் கூறிக் கொண்டே, தடியான ஆளிடம் வந்து குரலைத் தாழ்த்தியபடியே,

"அய்யா காங். நான் ஒண்ணு கேள்விப்பட்டேனே. இன்னைக்கி சாகடிச் சாங்களே குற்றவாளி அவன் சியா குடும்பத்தைச் சேர்ந்த வனாம்லே. யாருய்யா அது? எதுக்காக அவனுக்கு மரண தண்டனை நிறைவேத்தினாங்க?" என்று கேட்டான்.

"யாரு? அந்த விதவை சியாவோட மகனா? சின்னத் தனமான பொறுக்கி இல்லே அவன்."

தனது வார்த்தை ஜாலத்தில் அவர்கள் அனைவரும் கிறங்கிக் கிடப்பதைக் கண்ட காங், இன்னும் அதிகமான உணர்ச்சியோடு, ஓங்கிக் குரலெடுத்துப் பேசத் தொடங்கினான்.

"அந்தப் போக்கிரிக்கு உயிர் மேல ஆசை இல்லவே இல்லை. இந்தத் தடவை என்னால எதுவும் செய்ய முடியலே. அவனோட உடைகளைக் கழற்றி. ஜெயிலர் செங் கண்ணன் தூக்கிட்டுப் போயிட்டான். நம்ம பெரிய சுவான் அதிர்ஷ்டசாலி. அவருக்கு அப்புறமா மூணாவது சியா மாமா. இருபத்தஞ்சி வெள்ளிப் பணம் எல்லாத்தையும் அமுக்கிட்டாரு. ஒத்த தம்பிடி செலவு இல்லே."

சின்னச் சுவான் நெஞ்சைப் பிடித்து இருமியபடியே, மச்சுவீட்டுக்குள் இருந்து மெல்ல நடந்து வந்தான். சமையலறைக்குப் போய் ஆறிய கஞ்சியை கிண்ணத்தில் எடுத்து, அதில் கொதிநீரை ஊற்றி, குடிக்கத் தொடங்கினான். அவனுடைய அம்மா பரிவோடு அருகில சென்று.

"சரியாயிருச்சா மகனே? முந்தி போல இப்ப பசிக்குதா?" என்று கேட்டாள்.

"நிச்சயமாக் குணமாகும்." என்று கூறியபடியே சிறுவனைப் பார்த்த காங், கூட்டத்தை திரும்பிப் பார்த்து, "மூணாவது சியா மாமா, நிஜமாவே கெட்டிக்காரரு. அவர் மட்டும் தகவல் சொல்லாம மறைச் சிருந்தா அவர் குடும்பத்தையே தூக்கில போட்டிருப்பாங்க. அவங்க சொத்தையும் ஜப்தி பண்ணியிருப்பாங்க. ஆனா. அந்தாளுக்கு வெள்ளிப் பணம் கிடைச்சது. அந்தச் சின்னப் பொறுக்கி நிஜமாவே ஒரு போக்கிரி. அவன் ஜெயிலரைக் கூட புரட்சி செய்யும்படி தூண்டுனாம்ல."

"அப்படியெல்லாம் இல்லே." பின்வரிசையில் அமர்ந்திருந்த இருபது வயசுக்காரன் ஒருவன் குறுக்கிட்டான்.