• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-09 08:51:46    
தமிழ் மூலம் சீனம் பாடம் 57

cri
எண்கள் பற்றிய முதலாவது வகுப்பு

வணக்கம். இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். முதலில் கடந்த வகுப்பில் கற்றுக் கொண்ட வாக்கியங்களை கங்காயாஞ்சி நேயர் மன்றத்தின் மாணவர்கள் பேசுவார்கள்.

ராஜா.........மாணவர்கள் நன்றாக பேசுகின்றார்கள். இனிமேல் இத்தகைய பயிற்சி நமது வகுப்பில் அடிக்கடி இடம் பெறும். இந்த பரிமாற்ற தொடர்பு மூலம் நண்பர்கள் கற்றுக் கொண்ட சீன மொழில் மதிப்பிடலாம். அவர்களுக்கு உற்சாகம் அதிகரிக்கும் அல்லவா?

கலை......ஆமாம். மரியாதை வாக்கியங்கள் இதுவரை கற்றுக் கொண்டோம் இப்போதைக்கு இதை நிறுத்திவிட்டு எண்களை இன்றைய வகுப்பில் படிப்போம். தமிழ் மூலம் சீனம் புத்தகத்தில் 31வது பக்கத்தில் இந்த எண்கள் இருக்கின்றன.

ராஜா.......கலை. இப்போது நாம் படிக்கின்ற எண்கள் எது முதல் எதுவரை கற்றுக் கொள்ள வேண்டும்.

கலை.....சீன மொழியில் இ 1 முதல் ஸ் 10 பத்து வரை கற்றுக் கொள்ளலாமா?

ராஜா.....சரி, மெதுவாக ஒன்றை பின் ஒன்றாக எண்கள் கற்றுக் கொள்ளலாமா?

கலை......கற்றுக் கொள்ளலாம். முதலில் நான் ஒன்று முதல் 10 வரை குறிப்பிடுகின்றேன். நீங்கள் கவனமாக கேளுங்கள்.

ராஜா....சரி நண்பர்களே என்னுடன் இணைந்து சீன மொழியில்

ஒன்று முதல் பத்து வரையான எண்களை கேட்டு கவனியுங்கள்.

கலை......சீன மொழியில் இ என்றால் தமிழில் ஒன்று என்று பொருள்படுகின்றது. அர் என்றால் தமிழில் இரண்டு என்று பொருள்படுகின்றது. சான் என்றால் தமிழில் மூன்று பொருள்படுகின்றது. ஸ் என்றால் தமிழில் நான்கு என்று பொருள்படுகின்றது. வூ என்றால் ஐந்து என்று பொருள்படுகின்றது. லியூ என்றால் தமிழில் ஆறு என்று பொருள். ச்சீ என்றால் தமிழில் ஏழு என்று பொருள்படுகின்றது. பா என்றால் தமிழில் எட்டு என்று பொருள்படுகின்றது. ச்சியோ என்றால் தமிழில் ஒன்பது என்று பொருள்படுகின்றது. ஷி என்றால் தமிழில் பத்து என்று பொருள்படுகின்றது.

ராஜா......நீங்கள் ஒரே மூச்சில் ஒன்று முதல் பத்து வரை சொன்னீர்கள். எனக்கு குழப்பமாகிவிட்டது. மெதுவாக உங்களை பின்பற்றி கற்றுக் கொள்ளலாமா?

கலை......சரி, ராஜா நீங்களும் நண்பர்களும் என்னை பின்பற்றி இந்த 10 எண்களை சொல்லுங்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10

இ அர் சான் ஸ் வூ லியூ ச்சீ பா ச்சியோ ஷி

ராஜா......

1 2 3 4 5 6 7 8 9 10

இ அர் சான் ஸ் வூ லியூ ச்சீ பா ச்சியோ ஷி

கலை.....

1 2 3 4 5 6 7 8 9 10

இ அர் சான் ஸ் வூ லியூ ச்சீ பா ச்சியோ ஷி

கலை.....ராஜா எப்படி என்னை பின்பற்றி மூன்று முறை சொன்னீர்கள். நீங்கள் தனியாக ஒன்று முதல் பத்து வரை எண்கள் சொல்ல முடியுமா?

ராஜா.....சரி நான் தனியாக சொல்கின்றேன்.

1 2 3 4 5 6 7 8 9 10

இ அர் சான் ஸ் வூ லியூ ச்சீ பா ச்சியோ ஷி

கலை.....பரவாயில்லை. உச்சரிப்பை கேட்டால் உங்களுக்கு பிரிந்தது. தனித்தனியாக குறியிட்டு நீங்கள் பேச முடியுமா?

ராஜா....முயற்சி செய்கின்றேன். மெதுவாக எளிதானது முதல் சிக்கலாக குறிப்பிடுங்கள்.

கலை.....நான் தமிழ் மொழியில் எண் பற்றி பேசுகின்றேன். நீங்கள் சீன மொழியில் குறிப்பிடுங்கள். எப்படி.

ராஜா.....சரி துவங்குவோம்.

கலை.....இரண்டு

ராஜா.....அர்

கலை......நான்கு

ராஜா.......ஸ்

கலை.......ஒன்று

ராஜா......இ

கலை......மூன்று

ராஜா.......சான்

கலை.....ஆறு

ராஜா.......லியூ

கலை.......பத்து

ராஜா.......ஷி

கலை......ஒன்பது

ராஜா.......ச்சியோ

கலை......ஏழு

ராஜா.......ச்சீ

கலை......எட்டு

ராஜா.....பா

கலை.....ஐந்து

ராஜா....வூ

கலை......ராஜா நீங்கள் சீக்கிரமாக கற்றுக் கொண்டீர்கள். மீண்டும் பயிற்சி செய்யலாமா?

ராஜா.....செய்யுங்கள்.

கலை......இரண்டு

ராஜா.....அர்

கலை......நான்கு

ராஜா.......ஸ்

கலை.......ஒன்று

ராஜா......இ

கலை......மூன்று

ராஜா.......சான்

கலை.....ஆறு

ராஜா.......லியூ

கலை.......பத்து

ராஜா.......ஷி

கலை......ஒன்பது

ராஜா.......ச்சியோ

கலை......ஏழு

ராஜா.......ச்சீ

கலை......எட்டு

ராஜா.....பா

கலை.....ஐந்து

ராஜா....வூ