• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-09 10:57:35    
சிறப்பு நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்

cri

க்ளீட்டஸ்: இன்றைய முதல் கடிதம் ஈரோடு ஊஞ்சலூர் நேயர் என். அங்குராஜ் மார்ச் 2ம் நாள் ஒலிபரப்பான நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி பற்றி எழுதியது. சீன மகளிர் மட்டுமல்ல உலக மகளிர் அனைவரும் தலைமுடி அழகுடன் வைத்துக்கொள்ளவும் அழகு சாதன பொருட்கள் கொண்டு ஒப்பனை செய்துகொள்வதற்கும் முக்கியத்துவம் தருகின்றனர் என்பது உண்மை. சீனப் பெண்கள் உணவு உடை இவற்றில் கவனம் செலுத்துவதோடு, அழகாக் அபேசுதல், நடை உடை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர், உதடுகளில் சாயம் பூசவும், ஒப்பனை செய்யவும் கவனாமாக இருப்பதுபோல் அழகாக தோன்ற உடலில் எடையும், அதிகமான சதையும் கூடாமல் பார்த்துக்கொள்கின்றனர் என்றும் நிகழ்ச்சியின் மூலம் அறிந்துகொண்டோம். அதிலும் குறிப்பாக உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தருகின்றனர், முடிந்தால் தினமும் இலாவிட்டால் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை உடற்பயிற்சி செய்கின்றன்ர் அன்பதை அறிந்து நல்ல ஒரு அறிவுறையை பெற்றோம். தமிழகத்தில் பெண்கள் குழந்தை பெற்றபின் உடல் பருமனாகி விடுவது பொதுவாக காணப்படும் உண்மை ஆனால் சீனப் பெண்கள் குழந்தை பெற்றாலும் உடலை பருமனாகாமல் பார்த்துக் கொள்கின்றனர் என்பதை நிகழ்ச்சியின் மூலம் அறிந்தேன். இதற்கு உதாரணம் தமிழ்பிரிவின் தலைவர் கலையரசி மற்றும் வாணி ஆகியோரைக் குறிப்பிடலாம் என்று கூறியுள்ளார்.

வாணி: நன்றி அங்குராஜ் அவர்களே. உடல் பருமன் ஆவதை நாம் உடற்பயிற்சியின் மூலமும் சீரான உணவு பழக்கம் மூலமும் கட்டுப்படத்தலாம். இதில் ரகசியம் ஏதுமில்லை, நமது உடலை நாம்தானே கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும். நிகழ்ச்சியில் அடுத்து திருச்சி மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். மார்ச் 21ம் நாள் ஒலிபரப்பான சீன பண்பாடு நிகழ்ச்சியின் சீனாவில் இஸ்லாமிய மதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி கேட்டேன். வரலாற்றுக் காலத்தில் வர்த்தக நோக்கில் சீனா வந்து அங்கேயே தங்கிவிட்ட இஸ்லாமியர்களால் இஸ்லாம் சீனாவில் பரவிய அன்னிய மதமாக இருந்தாலும் சீனாவின் பூர்வீக மதங்களைப் போலவே சகல உரிமைகளுடனும் சுதந்திரமாக வளர்ந்துள்ளதை அறியமுடிந்தது. இது உலகிற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து மே 9ம் நாள் ஒலிபரப்பான சீனாவில் இன்பப் பயணம் நிகழ்ச்சி பற்றி நாமக்கல் ராசிபுரம் நேயர் கே. குணசேகரன் எழுதிய கடிதம். நிகழ்ச்சியில் லாசா நகரத்திலுள்ள உணவு விடுதியைப் பற்றி கூறப்பட்டது. விடுதி சிறியதாக இருந்தாலும் நிறைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். திபெத் இன பாணியில் இவ்வுணவு விடுதி அமைக்கப்பட்டது சிறப்பு என்பதை அறிய முடிந்தது. இதனை காணவும் , திபெத் உணவை சுவைக்கவும் இங்கே அதிக மக்கள் வருகின்றனர் என்பதும் அறிந்தோம் என்று குறிப்பிட்டுள்ளார்.