• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-24 19:32:38    
பீடபூமியில் குளிர்ச்சியான நகரம்—சிநிங்

cri

சீனாவின் சிங்ஹைய்-திபெத் பீடபூமி, உலகில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இதை தென் துருவம், வட துருவம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்து உலகின் 3வது துருவம் என புவியியல் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பலர் கருதுகின்றனர்.

சிநிங் நகரம், 2008ஆம் ஆண்டு பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மங்களப் பொருளான யிங்யிங்கின் பிறப்பிடமாகும்.

நெதர்லாந்தின் தேசிய மலரான TULIPமலரின்(மணி உருவப் பூ வகையின்)பிறந்தகமாகும். கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள சிங்ஹைய் திபெத் பீடபூமியில் நீர் மற்றும் oxygen(ஆக்ஸிஜன்)குறைவாக உள்ளன என்றும் தாவரங்கள் குறிப்பாக மலர்கள் வளர்வது கடினம் என்றும் பயணிகள் பலர் கருதுகின்றனர். ஆனால் இது உண்மையல்ல.

சிநிங் நகரில் தனிச்சிறப்பு வாய்ந்த புவி நிலையும் வானிலையும் TULIP மலர்கள் வளர்வதற்கு உகந்தது என்று இந்நகராட்சித் தலைவர் லொயுலின் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

பீடபூமியில் வானிலை குளிர்ச்சியானது. பகலிலும் இரவிலும் வெப்ப நிலை பெரிதும் வித்தியாசமாக உள்ளது. வெளிச்சம் அதிகம். இதனால், பல்வகை மலர்கள் குறிப்பாக TULIP மலர்கள் மிக அழகாகவும் நன்றாகவும் வளர்கின்றன என்றார்.

தற்போது சிநிங் நகரில் TULIP மலர் அழகான காட்சியாகத் திகழ்கின்றது. 2002ஆம் ஆண்டு முதல், சிநிங் நகரில் ஆண்டுதோறும் மே திங்கள் TULIP மலர் விழா நடைபெற்றுவருகின்றது.

சீனாவின் பல நகரங்களில் ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் திங்களில் கடும் வெப்ப நிலை ஏற்படும் போது சிநிங் நகரில் லேசான காற்று வீசுகின்றது. குளிர்ச்சியாக உள்ளது.

மிக வெப்பமான காலத்தில் அதன் வெப்ப நிலை 20 டிகிரி செல்சியஸுக்குட்பட்டது. இது பற்றி சீன தேசிய சுற்றுலாப் பணியகத்தின் துணைத் தலைவர் வாங்சியுன் கூறியதாவது,

கோடைக் காலத்தில் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பலர் சிநிங் நகருக்கு வருகை தருகின்றனர். இந்நகரிலுள்ள எழில் மிக்க இயற்கைக் காட்சியைக் கண்டுகளிப்பதோடு, குளிர்ச்சியான காலநிலையையும் அனுபவிக்கின்றனர்.

இவ்வளவு சிறந்த கோடைக் காலத் தலங்கள் சீனா மற்றும் உலகிலும் கூட மிகவும் குறைவானவை என்று பயணிகள் மகிழ்ச்சியுடன் கூறினர் என்றார் அவர்.

இந்தக் குளிர்ச்சியான வெப்ப நிலையில் உங்களோடு சேர்ந்து சிநிங் புறநகரில் அமைந்துள்ள தார் கோயிலைச் சென்று பார்க்கிறோம்.

சுமார் 400 ஆண்டு வரலாறுடைய இக்கோயில், புத்த மதத்தின் புனித இடமாகும். சிநிங் நகரின் தென் மேற்கிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தார் கோயில், வட மேற்கு சீனாவின் புத்த மத மையம் ஆகும்.

4 லட்சம் சதுரமீட்டர் பரப்பளவுடைய இக்கோயிலில் 1000த்துக்கும் அதிகமான முற்றங்களும் 4500க்கும் மேற்பட்ட மண்டபங்களும் உள்ளன. அவை, ஹென் மற்றும் திபெத் இனக் கலை பாணியில் கட்டப்பட்டவை.

இக்கோயிலில் சுவர் ஓவியம், பூத் தையல் பொருள், வெண்ணெய் மலர் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. அவை, தார் கோயில் கலையின் 3 தனிச்சிறப்புக்கள் என்று கருதப்படுகின்றன.

சுவர் ஓவியம் பற்றி குறிப்பிடும் போது, துன்ஹுவாங் முகௌக் கல்குகையில் இடம்பெறும் உலகப் பிரபல சுவர் ஓவியங்களை மக்கள் முதலில் நினைப்பார்கள்.

தார் கோயிலிலுள்ள சுவர் ஓவியங்களின் நிறம், ஓவியம் தீட்டும் நுட்பம் ஆகியவை துன்ஹுவாங் முகௌக் கல்குகையில் இடம்பெறும் சுவர் ஓவியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடியவை. பூத் தையல் பொருள் என்றால் என்ன?அது ஒருவகை கைவினை தையல் பொருளாகும்.

தார் கோயிலில் அனைத்து பூ தையல் பணிகளும் ஆண் துறவிகளால் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை தார் கோயிலில் 18 பூத் தையல் பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.