• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 15:32:50    
வூத்தான் மலை

cri

வூத்தான் மலைக் காட்சித் தலத்தில் இயற்கை காட்சிகள் பல உள்ளன. இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது, அவற்றில் ஒரு சிறிய பகுதி மட்டுமே.

தௌ மதம், சீனாவிலுள்ள பல மதங்களில் ஒன்றாகும். இதற்கு சுமார் 1800 ஆண்டுகள் வரலாறு உண்டு. இந்த மதத்தின் தொண்டர்கள் மதப்பாடத்திற்கு பின் கொன்பு பயிற்சியிலும் ஈடுபடுவதுண்டு.

மத்திய சீனாவின் ஹுபெய் மாநிலத்தின் வட மேற்கு பகுதியில், பிரபல தௌ மதப் புனிதத் தலமான வூத்தான் மலை அமைந்துள்ளது.

கடந்த பல நூறு ஆண்டுகளாக, வூத்தான் மலை அதன் அழகான சிகரம், கம்பீரமான தௌ மதக் கட்டடங்கள் ஆகியவற்றின் காரணமாக, உலகில் புகழ்பெற்றுள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியெசு மலை சிகரமானது, வூத்தானின் மிகவும் உயரமான மலையாகும்.

அங்கு வூத்தான் மலையில் மிகவும் புகழ்பெற்ற தங்க மண்டபம் உள்ளது. 5 மீட்டருக்கு மேற்பட்ட உயரமுடைய இத்தங்க மண்டபம், சுமார் 600 ஆண்டுகள் பழமையானது

இந்தத் தங்க மண்டபம் முழுமையாகத் தங்கத்தால் கட்டப்பட்டதல்ல. அது, வெண்கலத்தால் கட்டப்பட்டு, பிறகு தங்கமுலாம் பூசப்பட்டது.

அதற்கு 20 டன் தரமான வெண்கலமும், 300 கிலோகிராம் தங்கமும் பயன்படுத்தப்பட்டனவாம். சீனாவில் மிகப் பெரிய வெண்கல மண்டபம் இதுவாகும்.