சீனாவின் அன்னிய வர்த்தகம்
cri
இவ்வாண்டின் முதல் 7 திங்களில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 94185 கோடி அமெரிக்க டாலராகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 23 விழுக்காடு அதிகம். வர்த்தக உபரி சுமார் 7600 கோடி அமெரிக்க டாலராக உள்ளது என்று சீன சுங்கத் துறை தலைமை அலுவலகம் இன்று வெளியிட்ட தகவல் கூறுகிறது. இவ்வாண்டில் ஜுலைத் திங்கள் வரை, முக்கிய வர்த்தக கூட்டாளிகளுடன் சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சீராக வளர்ந்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான், ஆசியான் ஆகியவை சீனாவின் நான்கு பெரிய வர்த்தக கூட்டாளிகளாக உள்ளன.
|
|