• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-11 19:39:51    
உலக கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள்

cri

உலகக் கோப்பை கால்பந்து போல கூடைப்பந்து விளையாட்டின் உலகக் கோப்பை இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆகும். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டிகள், சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பினால் நடத்தப்படுகிறது. 1950ம் ஆண்டில் முதன் முறையாக அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டி இவ்வாண்டு ஜப்பானில் வருகின்ற 19ம் நாள் முதல் செப்டம்பர் திங்கள் 3ம் நாள் வரை நடைபெறும். உலகின் தலைசிறந்த கூடைபந்து அணி எது என்பதை நிர்ணயிக்கும் இந்த போட்டியில் இம்முறை 24 நாடுகள் கலந்துகொள்கின்றன.

பொதுவாக 16 நாடுகள் கலந்துகொள்ளும் இந்த உலக சாம்பியன் போட்டியில், இவ்வாண்டு தொடக்கம் இனிமேல் 24 அணிகள் கலந்துகொள்ளும் என்பதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா என 5 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகள் தத்தமது வட்டார அளவிலான சாம்பியன் போட்டிகளில் வெற்றியாளாராகி அதன்மூலம் உலக சாம்பியன் போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டன.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டது தவிர இபோட்டியை நடத்தும் நாடு, கடந்த ஒலிம்பிக் போட்டியின் வெற்றியளார் நாடு, வைல்ட் கார்ட் எனும் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்துகொள்ளும் 4 நாடுகள் உள்ளடக்கம் 24 நாடுகள் ஜப்பானில் உலக சாம்பியன் போட்டியில் கலந்துகொள்கின்றன.

இந்நாடுகளின் விபரம்:
அங்கோலா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, க்ரீஸ், இத்தாலி, ஜப்பான், லெபனான், லித்துவேனியா, நியூசிலாந்து, நைஜீரியா, பனாமா, போர்ட்டோ ரிகொ, கத்தார், செனகல், செர்பியா மற்றும் மான்டநீக்ரோ, ஸ்லோவேனியா, ஸ்பெயின், துருக்கி, வெனிசுவேலா, அமெரிக்கா.

இந்த 24 நாடுகளும் தல 8 நாடுகள் கொண்ட 4 குழுக்களாக பிரிக்கப்படுள்ளன. இந்த குழுவின் விபரம்
ஏ குழு - நைஜீரியா, லெபனான், அர்ஜென்டினா, பிரான்ஸ், வெனிசுவேலா, செர்பியா மற்றும் மான்டநீக்ரோ
பி குழு - பனாமா, நியூசிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், அங்கோலா
சி குழு - கத்தார், ஆஸ்திரேலியா, துருக்கி, லித்துவேனியா, பிரேசில், க்ரீஸ்
டி குழு - செனகல்,அமெரிக்கா, சீனா, இத்தாலி, போர்ட்டோ ரிகொ, ஸ்லோவேனியா.

இந்த 24 அணிகளும் முதலில் தத்தமது குழுவுக்குள்ளாக, குழுவின் அனைத்து அணிகளும் விளையாடி, தமது குழுவுக்குள் சிறந்த 4 அணிகள் தெரிவு செய்யப்படும். அதன்பின் ஏ குழுவில் முதலிடம் பெற்ற அணி பி குழுவின் 4ம் இடம் பெற்ற அணியுடனும், 2ம் இடம்பெற்ற அணி பி குழுவின் 3ம் இடம்பெற்ற அணியுடனும், 3ம் இடம்பெற்ற அணி பி குழுவின் 2ம் இடம்பெற்ற அணியிடனும், 4ம் இடம்பெற்ற அணி பி குழுவின் முதலிடம் பெற்ற அணியுடனும், அதே ரீதியில் சி மற்றும் டி குழுக்களின் அணிகளும் போட்டியிட்டு, இவற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதிக்கு தேர்வாகும். அதன் பின் 4 அணிகள் அரையிறுதியில் விளையாடி வெற்றி பெறும் இரு அணிகள் இருதியாட்டத்தில் விளையாடி உலக சாம்பியன் யார் என்பதை நிர்ணயிக்கும்.