• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-20 20:09:08    
சன்சென் நகரம்

cri

தென் சீனாவின் கடலோர நகரான சன்சென் நகரம் ஹாங்காங்கை ஒட்டியமைந்துள்ளது. இந்நகரம், சீனாவின் முதலாவது சிறப்புப் பொருளாதார நகரமாகத் திகழ்கின்றது.

சுமார் 20 ஆண்டு கால வளர்ச்சியினால், சிறிய மீன் பிடி கிராமமாக இருந்த இந்நிகரில், தற்போது மக்கள் தொகை 50 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன் பரப்பளவு சுமார் ஈராயிரம் சதுர கிலோமீட்டராகும்.

இந்நகரம் புதுமை பொலிவுடன் திகழ்கின்றது. இவ்விடத்தில் சுற்றுலா மேற்கொள்ளும் போது, பூங்கா போன்ற நகரின் வசதியையும் அமைதியையும் உணரலாம். தவிர, சில இயற்கை காட்சித் தலங்களுக்கும் சென்று பார்வையிடலாம்.

சீனாவின் இதர பல நகரங்களைப் போல, சன்சென் நகரிலும் உயரமான கட்டடங்களும் குறுக்கும் நெருக்குமான பாதைகளும் உள்ளன. மரங்கள் அதிக அளவில் வளர்கின்றன. பாதைகள் சுத்தமாக உள்ளன.

சன்சென் நகரில், ஏராளமான அலுவலகக் கட்டடங்கள் சிறப்பாகக் காட்சியளிக்கின்றன. சன்சென் ஜன்னல் என்னும் காட்சித் தலத்தில் 15 முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளன.

எடுத்துக்காட்டாக, மெழுகு உருவச் சிலைக் கூடம், திரைப்படம் காண்பிக்கும் இடம், சீன-பிரிட்டிஷ் வீதி என்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்ட பொருள் விற்பனை வீதி, பயணிகள் ஓய்வு எடுக்கும் இடம், உணவகம், பொழுதுபோக்கு இடம் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.