ரயில் பாதை மூலம் ஏற்றிச்செல்லப்படும் திபெத் பொருள்
cri
சீனாவின் சிங்காய்-திபெத் ரயில் பாதையில் உள்ள லாசா நிலையத்திலிருந்து நேற்றிரவு புறப்பட்ட ஒரு சரக்கு ரயிலில், ஷாங்காய் வணிகர்கள் கொள்முதல் செய்த வால்நட் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. சிங்காய்-திபெத் ரயில் பாதையின் மூலம் திபெத்தின் தனிச்சிறப்பு மிக்க பொருட்கள், சீனாவின் உள்புற மாநிலங்களுக்கு ஏற்றிச்செல்லப்படுவது இதுவே முதன்முறை. சரக்கு ரயில் புறப்பட்டதை ஒட்டி நடந்த விழாவில் பேசிய திபெத் தன்னாட்சி பிரதேசத்து அரசின் துணை தலைவர் Ciren, இந்த சரக்கு ரயில் வண்டியின் புறப்பாடு, திபெத் தொழில் நிறுவனங்களின் பொருட்கள், உள் புறச் சந்தையில் நுழையும் புதிய துவக்கத்தை கோடிட்டுக்காட்டுகிறது என்றும், திபெத் சந்தை, நாட்டின் பெரிய சந்தையில் சேர்வதற்கு புதிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறக்கப்பட்ட பின், ஆண்டுதோறும் திபெத்துக்கு நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் சரக்குகளின் போக்குவரத்துச் செலவு சுமார் 20 கோடி யுவான் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. திபெத் பொருளாதார வளர்ச்சியிலும் மொத்தச் செலவு பெரிதும் குறைந்துள்ளது. திபெத்தில் அடிப்படை வசதிகளை உருவாக்குவதற்கு இது நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது.
|
|