• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-11 09:36:32    
சீனாவின் மாடல் அழகிகள்

cri

சீன வானொலி நிலையம், இன்றைய சீன மகளில் நிகழ்ச்சியில், சீனாவின் மாடல் அழகிகள் என்பது பற்றி கூறுகிறோம். பல விளக்குகளின் பனிச்சிடும் ஒளியில் பஃச்சின் அரங்கில் நடந்து, ஒரு மாடல் அழகியாக மாறுவது, என்பது. சீனாவின் பல இளம் அழகிகளின் விருப்பமாகும். இன்று நாம் சில சீன மாடல் அழகிகளின் வாழ்க்கை பற்றி பார்க்கலாம் 180 சென்டிமீட்டர், உயரம், நீண்ட கருங்கூந்தல், பேசும் இரு பெரிய விழிகள் என்னும் அழகு அம்சங்கள் நிறைந்த zhang ying xian என்பவர், 20வது வயதான ஒரு மாடல் அழகியாவார். சீனாவின் வட கிழக்கு பகுதியிலான லியௌ னின் மாநிலத்தைச் சேர்ந்த அவர், சீனாவின் 6வது தொழில் முறை மாடல் போட்டியின் முதல் பரிசு பெற்றவர். தற்போது பெய்சிங்கிலுள்ள ஒரு புகழ்பெற்ற மாடல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

இந்த துறையில் எனது வளர்ச்சிக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக அவர்கள் கருதினார்கள். உடல் அமைப்பும், முகத்தின் பொலிவும் தரமான தொழில் முறை மாடலுக்கு பொருந்துவதாக இருந்தன. பல்வேறு ஆடைகளை நான் அணிய முடிகிறது. ஆனால், எனது தனிச்சிறப்பான பண்பைப் பிரதிபலிக்கும் ஆடை எனக்கு சிறப்பாக பிடிக்கும். துவக்கத்தில் இடை நிலை பள்ளியில் படித்தபோதே அவர் மாடல் உலகுடன் தொடர்பு கொண்டிருந்தார். அப்போது, அவரது வீட்டுக்கு அருகில், பல மாடல் பயிற்சி நிறுவனங்கள் இருந்தன. சிறந்த தகுதியுடைய பல பெண்கள் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பினர். அவரும், இத்தகைய பயற்சியில் கலந்து கொண்டார். பின்னர், பெற்றோரின் ஆதரவுடன், தேர்வு மூலம் தொழில் முறை மாடல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார்.

தொழில் முறை பாடலாக அவர் மாறத் துவங்கினார். இப்போது, அவரை போன்ற தொழில் முறை, மாடல்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாகும். மாடல் நிறுவனங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைத் தாண்டி விட்டது. ஏன் மாடலாக மாறினார் என்பது பற்றி பேசுகையில், பெண் மாடல் Wu xiao chen நேரடியாக கருத்து தெரிவித்தார். தொலைக்காட்சியில் புகழ்பெற்ற மாடல்களை பார்த்த போது, மிகவும் வியந்தேனஅ. இந்த துறை, ஒளிமயமான துறையாகும். T அரங்கில் நடப்பது, தன்னம்பிக்கையுடன் கூடிய நேரமாகும் என்றார்.