• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-12 18:20:27    
பெரும் சுவரின் பராமரிப்பு

cri

பெரும்சுவரின் Shan Hai Guan பகுதியின் பராமரிப்பு திட்டப்பணி அண்மையில் பன்முகங்களிலும் துவங்கியுள்ளது. இதற்கென, 70 கோடி யுவான் முதலீடு செய்யப்பட்டது. சீன அரசின் தலைமையில், பெரும்சுவரின் பராமரிப்பு திட்டப்பணி துவங்கியிருப்பதை இது கோடிட்டுக்காட்டுகின்றது. உலக பண்பாட்டு மரபுச்செல்வமான பெரும்சுவர், கிழக்கே He Bei மாநிலத்தின் Qin Huang Dao இன் Shan Hai Guan இலிருந்து மேற்கே Gan Su மாநிலத்தின் Jia Yu Guan வரை செல்கின்றது. அவற்றுக்கிடையில் 5000 கிலோமீட்டர் உள்ளதால், பத்தாயிரம் Li பெரும்சுவர் என அழைக்கப்படுகின்றது. பெரும்சுவரின் துவக்க இடமான Shan Hai Guan பகுதி, 6000 ஆண்டுகளுக்கு மேலான போர் மற்றும் இயற்கை சீற்றத்தின் பாதிப்பில், கடுமையாக சீர்குலைந்தது. இப்பராமரிப்பு திட்டப்பணி, முக்கியமாக, Shan Hai Guan பகுதியில் கடுமையாக நொறுங்கிய சுவரைக் காப்பாற்றும் தன்மையுடைய முறையில் நடைபெறும். 2012ம் ஆண்டில் இத்திட்டப்பணி முழுவதும் நிறைவேற்றப்படும் என்று மதிப்பிடப்படுகின்றது.