பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றுவது
cri
பொருளாதார மற்றும் சமூகத்தின் பன்முக, தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்த, பொருளாதார கட்டமைப்பை சீனா மேலும் சரிப்படுத்தி, அதிகரிப்பு முறையை மாற்ற வேண்டும் என்று சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் கூறியுள்ளார். அண்மையில், வட கிழக்கு சீனாவின் Hei Long Jiang மாநிலத்தில் சோதனை பயணம் மேற்கொண்ட போது பேசிய அவர், பொருளாதார கட்டமைப்பு சரிப்படுத்தலை சீனா தொடர்ந்து விரைவுபடுத்தி, பொருளாதார அதிகரிப்பு முறையை மாற்றி, சீர்திருத்தத்தை ஆழமாக்கி, தற்சார்புடன் கூடிய புத்தாக்கத்தைத் தூண்டி, எரியாற்றல் மற்றும் மூலவளத்தின் சிக்கனப் பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, பொருளாதார மற்றும் சமூகத்தின் பன்முக தொடரவல்ல வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறினார். இவ்வாண்டின் முற்பாதியில், சீனப் பொருளாதாரம் சீராகவும் விரைவாகவும் வளர்ச்சியுற்று வருகின்றது. ஆனால், பொருளாதாரம் இயங்குவதில், நிலையான சொத்து முதலீடு அளவுக்கு மீறி வேகமாக அதிகரிப்பது, எரியாற்றல் மூலவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமுக்கம் அதிகரிப்பது ஆகிய பிரச்சினைகள் நிலவுகின்றன. இதனால், பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்தி, பொருளாதார அதிகரிப்பின் தரத்தையும் பயனையும் உயர்த்துவது, சீனா தொடரவல்ல வளர்ச்சி அடைவதற்கு திறவுகோலாக திகழ்கின்றது.
|
|