• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-15 17:57:39    
வெள்ளரிக்காய் காய் சமைப்பது

cri
கலை....வணக்கமே நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம்.

ராஜா.....கலை கடந்த மாதத்தில் முக்கியமாக நாங்கள் அறிமுகபடுத்திய காய்கறி சமையல் பற்றி மறு ஒலிபரப்பு செய்தோம். இன்றைய சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் காய்கறி சமையலில் புதிய முறை பற்றி அறிமுகப்படுத்தலாமா?

கலை......ஆமாம். ஒரு மாதம் புதிய காய்கறி சமையல் குறிப்புக்கள் அடுத்த மாதத்தில் மறு ஒலிபரப்பு என்ற முறையில் நேயர்களுக்கு அறிமுகபடுத்துகின்றோம்.

ராஜா.....அப்படியானால் இன்றைய சீன உணவரங்கம் நிகழ்ச்சியில் என்ன சமைக்க போறோம்?

கலை.... இப்போது தமிழ் நாட்டில் கடும் வெப்பமாக இருக்கின்றது. வெப்பத்தை குறைக்க கொள்ளக் கூடிய காய்கறிகளை சமைத்து சாப்பிட்டால் உடல் நலத்திற்கு நன்மை தரும்.

ராஜா.....சரி நாம் இன்று நண்பர்களிடம் வெள்ளரிக்காய் சமையல் பற்றி சொல்லலாமா?

கலை.....மகிழ்ச்சி.

ராஜா...... வெள்ளரிக்காயை எண்ணெயில் வதக்கி சாப்பிடும் வழக்கம் தமிழ் நாட்டில் மிக குறைவு.

கலை.....ஆமாம். சீனாவிலும் கோடைகாலத்தில் மக்கள் வெள்ளரிக்காயை பொதுவாக பச்சையாத் தின்னவே விரும்புகின்றனர்.

ராஜா......ஆகவே பச்சை வெள்ளரிக்காய் தயாரிப்பது பற்றி கூறலாமா?

கலை.....உங்கள் யோசனையின் படி சீன மக்களுக்கு மிக பிடித்தமான வெள்ளரிக்காய் பற்றி பேசலாம்.

ராஜா..... வெள்ளரிக்காய் உணவு தயாரிக்க வேறு என்னென பொருட்கள் தேவை? கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள்.

கலை..... சொல்கின்றேன். முதலில் அரை கிலோம் வெள்ளரிக்காய் தேவை. அப்புறம் மிளகாய் பொடி, உப்பு, நல்லெண்ணெய் கொஞ்சம்.

ராஜா......நிறைய பொருட்கள் தேவை இல்லை போலிருக்கே.

கலை.....ஆமாம். சமைப்பதும் எளிதானது. இந்த நிகழ்ச்சியை கேட்ட பின் நீங்கள் வீட்டில் நீங்களாகவே தயாரித்து சுவைத்துப் பாருங்கள்.

ராஜா....... சீக்கிரமாக சொல்லுங்கள். நானும் தெரிந்து கொண்டு செய்து பார்க்கிறேன்.