• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-15 17:57:39    
காச நோய் தடுப்பும் சிகிச்சையும்

cri
வணக்கம் நேயர்களே. இன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் காச நோய் தடுப்பிலும் சிகிச்சையிலும் சீனா மேற்கொண்டுள்ள முயற்சி என்பது பற்றி கூறுகின்றார்கள் கிளீட்டஸ், தி. கலையரசி

கிளீட்டஸ்..... வரலாற்றில் உலகளவிலான பத்துக்குமேலான கோடி மக்களின் உயிரை பறிக்கும் நோய் கசா நோயாகும். கலை அப்படிதானே?

கலை.....ஆமாம். கடந்த 50ம் ஆண்டுகளில் மருத்துவ துறையில் முன்னேற்றமும் சுகாதார வசதியும் மேம்படுத்தப்பட்டதுடன் இந்த நோய் பரவல் கட்டுப்பாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

கிளீட்டஸ்.....கடந்த சில ஆண்டுகளில் இந்த நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் சில நாடுகள் செலுத்திய கவனம் குறைந்துவிட்டது. நிதி முதலீடு குறைக்கப்பட்டது. மக்கள் தொகை அதிகரிப்பு, ஆட்கள் இடம் நகருவது முதலிய காரணிகளால் மக்களால் மறக்கப்பட்ட இந்த நோய் மீண்டும் தலையெடுத்துள்ளது. பரவலாகியுள்ளது.

கலை.....உலகில் சில நாடுகளில் ஏற்பட்ட நிலைமை சீனாவில் காணப்பட வில்லை.

கிளீட்டஸ்.....இந்த நோய் தடுப்பு மற்றும் சிகிச்சையில் சீனா மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றி நண்பர்களுக்கு கொஞ்சம் எடுத்து சொல்வீர்களா?

கலை.....விளக்கிக் கூறுகின்றேன். சீனாவில் இப்போது தொற்று நோய் பற்றி குறிப்பிட்டபோதெல்லாம், காய்ச்சல், கல்லீரல் நோய் பற்றி எண்ணுவார்கள். காச நோய் பற்றி குறிப்பிடுவது மிகக் குறைவு. காச நோய் வைரசால் அழற்சிக்கப்பட்ட நுரையீரல் நோயாகும். ஒரு காலத்தில் இந்த நோய் சீன மக்களை கடுமையாக பாதித்தது. கடந்த 50ம் 60ம் ஆண்டுகளில் இந்த நோயை தடுத்து சிகிச்சை அளிப்பதில் சீன அரசு தீவரமாகஈடுபட்டது. பல தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் மற்ற நாடுகளில் ஏற்பட்டது போல கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் அதே நிலைமை தோன்றியது. இது பற்றி சீன சுகாதார அமைச்சின் துணை அமைச்சர் வுவாங் லுங் தெ கூறியதாவது.

கிளீட்டஸ்....... காச நோய் தற்போது சீனாவில் மகிழ்ச்சி சொல்ல முடியாத நிலையில் உள்ளது. சீனா உலகில் காச நோய் ஏற்பட்ட 22 நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்த நோயாளிகளின் எண்ணிக்கையில் உலகில் இந்தியாவை அடுத்து சீனா உள்ளது என்றார்.

கலை.....தற்போது சீனாவில் சுமார் 45 லட்சம் மக்கள் இந்த நோயினால் அல்லல்பட்டுள்ளனர். இது நாட்டின் மக்கள் தொகையில் 0.34 விழுகாடாகும். ஆண்டுக்கு இந்த நோயினால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரமாகும். மற்ற தொற்று நோயினால் மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையை இது தாண்டியது என்று சீன சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிபரம் காட்டுகின்றது.

கிளீட்டஸ்.....கடந்த 50ம் ஆண்டுகளில் தடுப்பூசி மருந்து ஊசி போடுவதன் மூலம் காச நோயை தடுப்பது சீன அரசின் நோய் தடுப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டது என்று நான் கேள்விப்பட்டேன். குழந்தைகள் பிறந்தவுடன் அடிப்படையில் தடுப்பு மருந்து ஊசி போடப்பட்டது. இருந்தாலும் புதிய காச நோயாளிகள் ஏற்பட்டது ஏன்?

கலை.....நான் நிபுணர் அல்ல. மருத்துவ நிபுணர்களின் விளக்கத்தை கேளுங்கள். தடுப்பூசி மருந்து போடுவது குழந்தைகளிடையில் தொற்றிய காச நோயை தடுத்து குறைக்கலாம். வயது வந்தவர்களை பொறுத்தவரை இந்த மருந்து பயன் தராது. ஆகவே காச நோயை தடுப்பதில் நடவடிக்கைகளை உற்சாகத்துடன் மேற்கொண்டு தொற்றிய காச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த முயற்சி மூலம் நோய் தொற்றின் மூல தோற்றம் குறைக்கப்படும்.

கிளீட்டஸ்.....ஆகவே காச நோயை தடுத்து சிகிச்சையளிப்பதில் முக்கிய காலடி என்றால் காச நோயாளிகளை கண்டுபிடிக்கும் விகிதத்தை உயர்த்துவதாகும் அப்படித்தானே?

கலை......இந்த முயற்சியில் சீன அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக காச நோயை சோதனையிடும் சாதனங்களை பொருத்துவது, சிறப்பு மருத்துவ ஊழியர்களுக்கு சிகிச்சை அளிப்பது, காச நோயை தடுத்து சிகிச்சையளிக்கும் அறிவை பிரச்சாரம் செய்யும் அளவை அதிகரிப்பது முதலியவை மேற்கூறிய நடவடிக்கைகளில் அடங்கும்.