• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-14 11:20:02    
புச்சியான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி

cri
கடந்த நூற்றாண்டின் 70ம் ஆண்டுகளில், சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள கடலோர மாநிலங்களில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது, புச்சியான் மாநிலம், தனது வட்டார மேம்பாட்டைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வணிகரின் நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்த்தது. ஆனால், 20 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரே காலத்தில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு கொள்கையை செயல்படுத்திய அண்டை மாநிலமான குவாங் துங் மாநிலத்தை விட, புச்சியானின் பொருளாதார வளர்ச்சி, சிறியதாகவே இருக்கிறது. கடந்த ஆண்டில், குவாங் துங் மாநிலத்தின் மொத்த உற்பத்தி, 2 லட்சத்து பத்தாயிரம் கோடி யுவானைத் தாண்டியது. புச்சியான் மாநிலத்தின் மொத்த உற்பத்தியே, சுமார் 65000 யுவானாக மட்டுமே இருந்தது.

புச்சியான் மாநிலத்தின் சமூக அறிவியல் ஆய்வகத்தின் தலைவர் யேன் செங் இது பற்றிப் பேசுகையில், புச்சியான் மாநிலம், தைவான் உடன்பிறப்புக்களுடைய மூதாதையரின் தாயகமாக இருந்ததால், முன்பு, தைவான் வணிகர் பலர் அங்கே முதலீடு செய்தனர். ஆனால், இந்த குடும்ப உறவு மட்டுமே போதுமானதல்ல என்று கருத்து தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

புச்சியான், தைவானை ஒட்டியுள்ளது. ஆனால், தைவான் அதிகார வட்டாரம் விதித்துள்ள தடையினால், மக்களும், சரக்கும் தைவான் நீரிணையின் கிழக்கு கரையிலிருந்து இங்கே நேரடியாக வர முடியாது. ஹாங்காங்கை வழியாகச் சுற்றிக் கொண்டு தான் வர வேண்டும். இதனால், குவாங் துங் மாநில தைவான் வணிகர்கள் விரும்பும் புதிய முதலீட்டு இடமாக மாறியுள்ளது. ஒரு காரணம், நெருங்கிய தூரம். வேறு காரணம், சூ சியாங் ஆற்று முகத்துவாரப்பகுதியில் ஹாங்காங் மற்றும் மகெளவின் முதலீட்டினால், தொழில் சூழல் ஒரே சீராக உள்ளது. 90ம் ஆண்டுகளின் பிற்பாதியில் இருந்து, தைவான் வணிகர்கள், சீனாவின் பொருளாதார மையமான ஷாங்காய் மாநகரத்தில் முதலீடு செய்து வருகின்றனர் என்றார் அவர்.

தொழில் நிறுவனங்கள் அதிகம் இல்லை, என்பதும் அடிப்படை வசதிகள் பின்தங்கிய நிலையில் இருப்பதும், புச்சியான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாகும் என்றும் யே செங் தெரிவித்தார்.

தைவான் நீரிணையின் மேற்கு கரை, சீனாவின் அடுத்த ஐந்தாண்டு சமூக பொருளாதார வளர்ச்சி திட்ட வரைவில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. துறைமுகப் பொருளாதாரத்தைப் பயன்படுத்தி, தைவான் நீரிணை மேற்கு கரையின் வேகமான வளர்ச்சியைத் தூண்டுவதற்காக, இவ்வட்டாரத்தின் துறைமுகங்களின் கட்டுமானத்தை புச்சியான் மாநிலம் தீவிரமாக்கியுள்ளது. புச்சியான் மாநிலம், சுமார் 3300 கிலோமீட்டர் தொலைவுக்கு கடற்கரையைக் கொண்டுள்ளது. அதற்கு எதிரே உள்ள தைவான் நீரிணை, உலகளவில் சரக்கு போக்குவரத்து மிகவும் வளர்ச்சியடைந்த நீர் வழியாகும். அதை தங்க கப்பல் போக்குவரத்து பாதை என்றும் சொல்லலாம். தற்போது, 10 ஆயிரம் டன், ஒரு லட்சம் டன் ஏன் மூன்று லட்சம் டன் எடையுள்ள சரக்கு கப்பல்கள் கூட நிறுத்தப்படும் வகையில், பல பெரிய துறைமுகங்கள் புச்சியான் கடலோரத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. அடுத்த ஐந்து ஆண்டுகளில், துறைமுக கட்டுமானத்திற்காக, புச்சியான் மாநில அரசு, 2900 கோடிக்கு கூடுதலான யுவான் முதலீடு செய்யும். 2010ம் ஆண்டில், ஆண்டுதோறும் புச்சியான் துறைமுகங்களின் வழியாக, 30 கோடி டன்னுக்கும் அதிகமான சரக்குகள் ஏற்றி இறக்கப்படும்.

துறைமுகங்களின் கட்டுமானத்துடன், துறைமுகத்துக்கு அருகே தொழில் பகுதியும் வளர்ச்சியடைந்து வருகின்றது. புச்சேள நகரிலுள்ள சின் காங், ஆழ் நீர் பெட்டக துறைமுகமாகும். அதன் பொறுப்பாளர் CAI FU YONG எமது செய்தியாளரிடம் பேசுகையில், எரியாற்றல், வேதியியல் தொழிற்துறை, பின்னணி சேவை ஆகியவற்றை முக்கியமாக கொள்ளும் நவீன துறைமுக தொழில்கள் அடங்கிய தொழில் மண்டலம் கட்டப்பட்டு வருகிறது என்றார்.