
சீனாவில் கடந்த ஜூலை திங்களில், நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை 60120 கோடி யுவானை எட்டியது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 13.7 விழுக்காடு அதிகம் என்று சீனத் தேசிய புள்ளி விவர அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது. வணிகப் பொருட்களின் சில்லறை விற்பனையைப் பொறுத்த வரை, ஜூலை திங்களில், கட்டிட பொருட்கள், மெத்தைகள், தகவல் தொடர்பு சாதனங்கள், எண்ணெய் மற்றும் எண்ணெய் உற்பத்தி பொருட்கள், வீட்டு சாமான்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் சில்லறை விற்பனை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட கணிசமாக அதிகரித்துள்ளது. இவ்வாண்டில் சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை, 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டக்கூடும் என்று சீன வணிக துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. இது, கடந்த ஆண்டில் இருந்ததை விட 13 விழுக்காடு அதிகரிக்கக்கூடும்.
|