
தற்போது, தேசிய இன விவகார கமிட்டி, தேசிய வளர்ச்சி சீர்திருத்தக்கமிட்டி, நிதி அமைச்சகம் ஆகியவற்றுடன் இணைந்து, மக்கள் தொகை குறைவான தேசிய இன வளர்ச்சி பணிக்கு ஆதரவாக பலவகைகளிலும் ஏற்பாடு செய்துள்ளதாக, சீன தேசிய இன விவகார கமிட்டியின் துணை தலைவர் யாங் ஜின் ச்சிக கூறினார். இது பற்றி அவர் கூறியதாவது:
"இதற்கு முக்கியமாக, கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, உற்பத்தி மற்றும் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவது. பொருளாதாக கட்டமைப்பைச் சரிப்படுத்தி, பொது மக்கள் கூடுதலான வருமானம் பெற வழிகாட்டுவது, அறிவியல் தொழில் நுட்பம், கல்வி, சுகாதாரம், பண்பாடு முதலிய சமூக லட்சியத்தை அடைய, சமூக முன்னேற்றத்தை தூண்டுவது, திறமைசாலிகளுக்கு பயிற்சியை வலுவாக்கி, இந்தச் சிறுபான்மை மக்களின் கல்வியறிவை உயர்த்துவது ஆகியவை இந்த ஏற்பாடுகளாகும்." என்றார், அலர்.

மக்கள் தொகை குறைவான தேசிய இனங்கள் வாழும் கிராமங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட, அடுத்த ஐந்தாண்டுகளில் 100 கோடி யுவான் செலவிடுவதென சீன அரசு முடிவு மேற்கொண்டுள்ளது. அதே வேளையில், நிதி அமைச்சும், மத்திய வங்கியும், நிதி திட்டப்பணி மற்றும் கொள்கையில், இக்கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளன. இவ்வினங்களின் இருப்பிடங்களில், அடிப்படை வசதி மற்றும் உற்பத்தி வாழ்க்கை நிலைமைப் பிரச்சினைகளை வேரோடு களையும் வகையில், மின்வசதி, போக்குவரத்து, தொலைப்பேசி, வானொலி, தொலைக்காட்சி, மக்களுக்கும் கால் நடைகளுக்கும் குடிநீர், பொது மக்களின் உறைவிடம் முதலியவற்றில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் தொகை குறைவான தேசிய இனங்களில் தற்போது, இன்னமும் சுமார் இரண்டு லட்சம் ஏழைகள் இருக்கின்றனர். மேற்கூறிய கொள்கை நடவடிக்கை தவிர நிதியுதவியையும் அரசு அதிகரிக்கும். மூலவள மேம்பாட்டை வெளிக்கொணர்வது, தூய்மையான உணவுப் பொருட்களையும், தனித்தன்மை வாய்ந்த விவாய உற்பத்திப் பொருட்களையும் பயிரிடுவது, சுற்றுலா வளர்ச்சி ஆகியவற்றில் இந்த ஏழைகள் உதவி பெறுவர்.
|