• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-17 15:29:19    
வாள் நுனியில் நடனம்

cri

சீனாவில், வாள் மலையில் ஏறுவது, தீ கடலில் மூழ்குவது என்ற ஒரு பழ மொழி கூறப்படுகின்றது. ஒருவர் தன் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, எல்லா இன்னல்களுக்கும் ஆபத்துகளுக்கும் அஞ்சாமல் முன்னேறி போராடுவதை இது வர்ணிக்கின்றது. ஆனால் இன்று சீனாவின் குய்சோ மாநிலத்தைச் சேர்ந்த 14 வயதான ஒரு சிறுமி லோங் பெங் ச்சி, ஜுன் திங்கள் 4 ஆம் நாளன்று நான்ஜின் நகரிலுள்ள ஜியாங்சு மாநிலத்தின் தொலைக்காட்சி நிலையத்தின் அரங்கத்தில் வாள் நுனியில் ஆடினார்.

அவர் வாள் நுனியில் வெறுங் காலால் இரண்டு கைகளை இலேசாக அசைத்து, மிகவும் அழகாக ஆடினார். இந்த வாள் நுனிமீது ஒருவர் ஒரு முறை நடந்தால் அவருக்கு ஒரு லட்சம் யுவான் வழங்க விரும்புவதாக இந்த சிறுமியின் அங்கு இருந்த மக்கள் அனைவருக்கும் சவால் விடுத்தார். இந்த சிறுமி வாள் நுனிமீது நின்றபடி இவ்வளவு செறிந்த கவனத்துடன் ஆடுவதை பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் கவலையுடன் இருந்தனர்.

இவ்வளவு ஆபத்தான திறமையை, குறுகிய காலப் பயிற்சி மூலம் பெற முடியாது. அவர் ஆடும் போது, அவருடைய உடலின் எடை முழுவதும் மிக கூரிய வாள் நுனியில் குவிந்திருந்தது. மிக சிறிய பரப்பளவு அதிக அழுத்தத்தை தாங்க வேண்டும். இதற்கு மிகுந்த உள்ளுடல் திறமை தேவைப்படும். இந்த அரங்கேற்றத்தில் சிறுபான்மை தேசிய இனமான மியௌ இனத்தின் ச்சிங்குங், ச்சிகுங் ஆகிய இரண்டு வகை திறன்களை சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.

14 வயதான சிறுமி இவ்வளவு ஆபத்தான திறமையைப் பயிற்சி செய்து வெற்றி பெறுவதில் எத்தனை முறை காயமடைந்தார். எவ்வளவு கஷ்டங்களைச் சமாளிக்க வேண்டும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.